بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நகர் மன்ற தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது ! அச்சிடுகமின்-அஞ்சல்
11 அக்டோபர் 2011 காலை 08:09

உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் பொது வேட்பாளராக போட்டியிடும் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது !

கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 28ஆவது செயற்குழுக் கூட்டம் 09.10.2011 அன்று காலை 11.00 மணிக்கு அவ்வமைப்பின் அலுவலகத்தில் கூடியது. மன்றத்தின் தலைவர் மஸ்ஊத் அவர்கள் தலைமையில்,மன்றத்தின் செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் முன்னிலையில் நடைபெற்றது.

துவக்கமாக கூட்டத்தலைவரும் மன்றத் தலைவருமான மஸ்ஊத் துவக்கவுரையாற்றினார்.

உள்ளாட்சித் தேர்தல் 2011:

காயல்பட்டினத்தின் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு 7 பேரும், நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கு ஏராளமானோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மன்றத்தின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதர்க்காக உறுப்பினர்கள் அனைவர்களும் நீண்ட நேரம் கலந்தாலோசித்து கூட்டத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நியமனம் செய்யப்பட்ட நகர்மன்றத் தலைவர் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளராக போட்டியிடும் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நமது சமுதாயத்தை சார்ந்த அணைத்து வேட்பாளர்களும் நம் நகர்நலப்பணிகளில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் என்பதில் மலபார் காயல் நல மன்றத்தை பொறுத்தவரை மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. இருந்தாலும் போட்டியிடும் அனைவரும்யும்

தேர்வு செய்ய முடியாது என்பதால் நகர்நலப்பணிகள் சிறப்பாக நடப்பதற்கு நம் அனைவர்களின் ஒற்றுமை மிக மிக அவசியம்.எனவே இந்த முடிவை மலபார் காயல் நல மன்றம் MKWA எடுதுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செயற்குழு உறுப்பினர்கள் வருகை:

செயற்குழு கூட்டத்திற்கு வரமுடியாத சூழ்நிலையில் பொறுப்பை உணர்ந்து கூட்டர்திக்கு வரமுடியாத காரணத்தை செயற்குழு உறுப்பினர்கள் முன்னதாக தெரிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக் குழு கூட்டம் :

மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) பொதுக்குழுக் கூட்டம் வரவிருக்கும் 30-10-2011 அன்று நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கூட்டம் வழமைபோல் சகோதரர் நைனாகாக்க அவர்கள் வீட்டு மாடியில் வைத்து மாலை 5 மணிக்கு நடை பெரும். இன்ஷாஅல்லாஹ்

அன்பான அழைப்பு:

கூடத்திற்கு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.

காலை 11.00 மணிக்கு துடங்கிய கூட்டம் மதியம் 1.00 மணிக்கு நன்றியுரைக்குப் பின், அனைவரின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:

S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா),

செய்தித் தொடர்பாளர்,(MKWA),

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

“நடப்பது என்ன?” முறையீட்டைத் தொடர்ந்து, மகுதூம் தெருவிலுள்ள குப்பைத்தேக்கம் நகராட்சியால் அகற்றம்!
நெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்திட நடவடிக்கை கோரி - சென்னையிலுள்ள அரசு செயலரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மனு!
பொது இடங்களில் சிசிடீவி கேமரா நிறுவுவதில் நகராட்சி அலட்சியம்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் “நடப்பது என்ன?” குழுமம் புகார் மனு!
காட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன?” அறிவிப்பு!
அரசு மருத்துவமனையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தினால் புதிய வசதிகள்! மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன?” குழுமத்திடம் தகவல்!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com