بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நடந்து முடிந்த மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து வந்த விமர்சனத்திற்கு (MKWA) வின் அவசர செயற்குழுவில் விளக்கம் !அச்சிடுகமின்-அஞ்சல்
12 அக்டோபர் 2011 காலை 09:16

மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) அவசர செயற்குழு கூட்டம் மன்றத்தின் தலைவர் மஸ்ஊத் அவர்கள் தலைமையில் 11-10-11 அன்று இரவு 9 மணிக்கு அவ்வமைப்பின் அலுவலகத்தில் கூடியது.

11102011003

நகர் மன்ற தேர்வு

நகர் மன்ற தேர்வு விசயமாக 9-10-11 அன்று செயற்குழு மினிட்டில் உள்ள தீர்மானம் :-

ஊரில் நகராட்சி தேர்தல் பற்றி உறுப்பினர்கள் மத்தியில் கலந்தாலோசனை நடந்தது. மன்றத்தின் செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் அவர்களுக்கு இந்த விசயத்தில் உடன்பாடு இல்லாததால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். நமது ஊர் நலன் கருதி நகர் மன்ற தலைவர் பொறுப்பிற்கு வேட்பாளராக போட்டியிடும் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா என்ற பெண்ணுக்கு MKWAதனது முழு ஆதரவை தெரிவிக்கின்றது. நகர் மன்ற தேர்வு விசயமாக கலந்தாய்வில் செயற்குழு உறுப்பினர்கள் 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 12 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் மன்றத்தின் செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் வெளிநடப்பு செய்தார். மீதம் உள்ள 11 உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியதில் தலைவர் நீங்கலாக 8 ஆதரவும் ஒரு எதிர்ப்பும் ஒரு நடுநிலையும் வைத்ததால் அந்த தீர்மானம் நிறைவேறியது .

செயலாளர் அறிக்கை

மேலும் இந்த சலசலப்பால் MKWA வின் ஒற்றுமைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதை செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் கூட்டத்திற்கு உணர்த்தி சொன்னார். .

இரவு 9.00 மணிக்கு துடங்கிய கூட்டம் இரவு 10௦.30 மணிக்கு அனைவரின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்

தகவல்:

S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா),

செய்தித் தொடர்பாளர்,(MKWA)

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

“நடப்பது என்ன?” முறையீட்டைத் தொடர்ந்து, மகுதூம் தெருவிலுள்ள குப்பைத்தேக்கம் நகராட்சியால் அகற்றம்!
நெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்திட நடவடிக்கை கோரி - சென்னையிலுள்ள அரசு செயலரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மனு!
பொது இடங்களில் சிசிடீவி கேமரா நிறுவுவதில் நகராட்சி அலட்சியம்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் “நடப்பது என்ன?” குழுமம் புகார் மனு!
காட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன?” அறிவிப்பு!
அரசு மருத்துவமனையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தினால் புதிய வசதிகள்! மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன?” குழுமத்திடம் தகவல்!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com