காசு கொடுக்கும் கயவர்கள்! களவு போகும் ஜனநாயகம்! | ![]() | ![]() |
14 அக்டோபர் 2011 மாலை 11:11 |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நமது தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது பணம் புகுந்து விளையாடியதை நாம் அறிவோம்.வீடு வீடாக கதவை தட்டி தலைக்கு ஆயிரம் ருபாய் வீதம் அப்போது விநியோகம் செய்யப்பட்டது. அந்த இனிய நினைவுகள்? இன்னும் நம் ஊர் மக்களின் நெஞ்சை விட்டு நகரவில்லை.அப்போது பெயரளவில் ஒற்றுமை பேசும் பேரவையினர் கைக்கட்டி பார்த்துக்கொண்டிருந்தனர். அது போலவே இந்த நகராட்சி தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக நமக்கு நம்ப தகுந்த தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதில் முன்னாள் நகர அரசியல் பிரமுகரும், சமுதாய கட்சியை சார்ந்தவன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் இன்னொரு நபரும் தீவிர பட்டுவாடாவில் களம் இறங்கி இருப்பதாக தகவல். وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள் - அல் குர்ஆன் 2:188. இது குறித்து நகரில் சிலர் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர், பறக்கும் படை அதிகாரி, மாநில தேர்தல் கமிஷனர் ஆகியோருக்கு புகார்கள் ராக்கட் வேகத்தில் அளித்துக்கொண்டிருக்கின்றனர் . ஐக்கியம் என்ற போர்வையில் நகர மக்களை ஜனநாயகத்திற்கு எதிராக திசை திருப்பிக்கொன்டிக்கும் ஒரு சிலர், தங்களால் நிறுவப்பட்டுள்ள டம்மி வேட்பாளர் ஒருவேளை மக்களால் தோற்கடிக்கப்பட்டு விடுவாரோ என்ற கவலையிலும் பயத்திலும் சமீப நாட்களாக பயத்தில் பரிதவிக்கின்றனர். இதனால் பல பெருந்தொகைகள் இரவுகளில் தூக்கத்தை தொலைத்து விட்டு திரு திரு கண்களோடு ஊரில் சதா உலா வருவதை காண்கிறோம். வேட்பாளர் தேர்வு சரியான முறையில் நடக்கவில்லை என இவ்வூரின் நலம் நாடுவோர் பலர் சொல்லிக்கொண்டிருக்க, வேட்பாளரே சரியில்லை என ஜலாலிய்யா மஜ்லிசில் நடைபெற்ற மகளிர் கூட்டத்தில் சிலர் கருத்து கூறியதை அடுத்து அக்கூட்டத்தை வழி நடத்திய ஒரு மறுதேடல் பிரமுகர் மேடை ஏறி பெண்களை சமாதானப்படுத்திய தமாஷும் அங்கு அரங்கேறியது. புற நகர் பகுதிகளில் பணத்தோடு திரியும் அவலங்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் வந்ததையொட்டி புற நகர் சென்று சிலரிடம் பேட்டி கண்டு அதிர்ந்து போனது நம் நகர் வலம். தனது வேட்பாளரின் வெற்றிக்காக எது வேண்டுமானாலும் செய்யும் அரசியல் கட்சிகளைவிடவும் மோசமான முறையில் சில நகர பிரமுகர்கள் ஈடுபடுவதாக செய்திகள் சதா வந்துக்கொண்டிருக்கிறது. இந்த ஊரை பிடித்த சாபக்கேடான அந்த ஏகாதிபத்தியவான்கள் தான் இந்த பட்டுவாடாவிற்கு காரணம் என்று நகர மக்கள் முனு முனுக்கின்றனர். அந்த எஜமானித்துவத்தின் தரகர்களான சிலர் பண கட்டுகளோடு நகரில் வலம் வருகின்றனர்.எனவே பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும். இவ்வாறானவர்கள் தங்கள் பகுதிகளில் தென்பட்டால் புகார் செய்யும் சில தொலை தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன. தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் Toll Free எண்கள் 1800 42570 72 1800 42570 74 சென்னை தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமையக எண்கள் (+91 44) 2475 3001 Fax எண்கள் (+91 44) 2475 3300 மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் (மாவட்ட ஆட்சியர்) (+91 461) 234 0600 Fax (+91 461) 234 0606 தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வையாளர் திரு மதிவாணன் IAS - (+91) 94440 21488 Police - IG (Elections) (+91) 94980 30108 Police - SP (Elections) (+91) 94980 30109 Principal Election Officer (Municipalities) (+91) 94980 30073 இது ஒன்றையும் அறியாமல் நகராட்சி தேர்தலுக்காக தாற்காலிக ஒற்றுமை கோஷத்திற்கு ஆட்பட்டு இந்த யோக்கிய சிகாமணிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற நேற்றைய பொதுக்கூட்டத்தில் பங்குபெற்ற சில அறிவு ஜீவிகளையும்,ஆலிம் பெருமக்களையும் நினைத்தால் கவலை, சோகம் போன்றவைகளை தவிர எஞ்சுவதற்கு ஏதும் இல்லை. காசு கொடுத்து ஜனநாயகத்தை காவு வாங்கும் இந்த போலிகளின் முகமூடிகளை கிழிக்க பொதுமக்களாகிய நாம் துணிவுடன் ஜனநாயக முறையில் நீதிக்காக கடமையாற்ற வேண்டும். தேர்தல் நேரங்களில் இந்த கள்ள ஒட்டு கயவர்களை நாம் அடையாளம் கண்டுகொண்டு இந்திய அரசியல் நிர்ணய சட்ட முறையில் எதிர்கொள்ள வேண்டும். களம் இறங்குவோம்! காசு கொடுக்கும் கயவர்களை துகில் உறிப்போம்! ஒட்டு போட வரும் கள்ள வாக்காளர்களை அடையாளம் காணுவோம்!! ஆக்கம்: நகர்வல நிருபர்கள் Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
செய்திகள்
![]() | வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்! |
![]() | காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!! |
![]() | இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்! |
![]() | மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்? |
![]() | படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது? |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |