ஜனநாயகமா? பணநாயகமா? இப்படிப்பட்ட கேள்விகளோடு இந்த நகராட்சி தேர்தலை நாளை (17/10) காயல்மாநகர மக்கள் சந்திக்க இருக்கிறார்கள்.ஓர் ஊர் என்று இருந்தால் செல்வந்தர்கள் இருப்பது சகஜம்.அந்த செல்வந்தர்கள் ஊர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்படுவர்.ஆனால் தனது ஆதிக்கம் நிலைக்க சுய நலம் தழைக்க பொது விசயத்தில் ஈடுபடுவது அதற்க்காக சில அல்லக் கைகளை இறக்கி விட்டு பணத்தை தண்ணீர் போல் இறைப்பது என்பது இஸ்லாத்தின் பார்வையில் மட்டுமல்லாது ஜனநாயக அடிப்படையை தகர்க்கும் பெரும் குற்றமாகும். அடுத்து நினைத்ததை பணத்தால் சாதிக்க முடியும் என்ற ஆணவ செருக்குடன் செயல்படுவது மாபெரும் கர்வமாகும்.இது இரண்டும் அல்லாஹ்வுக்கு மிகுந்த கோபத்தை வரவழைப்பதும் ஆகும். இதனை காயலில் பிறந்த எந்த ஒரு தன்மான முஸ்லிமும் அறிவர்.குறிப்பாக நடைபெற இருக்கும் நகர்மன்ற தேர்தலில் யார் எந்த வேட்பாளர் ஜெயிப்பது,தோற்பது என்பதை விட மக்கள் மத்தியில் எழுப்பும் கேள்வி என்னவெனில் ஜெயிக்க போவது பணநாயகமா ? ஜனநாயகமா? ஊரையே அடக்கி ஆள வைப்பது தொடர வேண்டுமா? அல்லது யாரோ ஒரு சிலர் கூடி முடிவெடுத்த செட்டப் வேட்பாளர் ஜெயிக்க வேண்டி அவர்களுக்கு எதிரான வேட்பாளரை பெண் என்றும் பாராமல் சேற்றை வாரி இறைப்பது கட்டுக்கட்டாய் பொய் மூட்டையை அவிழ்த்து விடுவது தான் தர்மமா? எந்த அளவு தரம் தாழ்ந்து போக முடியுமோ அந்த அளவுக்கு தரமிறங்கி செயல்படுவது கேவலம் இல்லையா ? இப்படி நினைத்ததை சாதிக்க வேண்டி வெட்கம் கெட்டு செயல்படுவது மனிதாபிமானம்,மன சாட்சி, இவைகளுக்கு அப்பாற்பட்டவை என்பது மட்டுமல்ல முற்றிலும் ஈமான இழந்த நிலை அல்லவா? எனவே வாக்காள பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் ஜனநாயக அடிப்படையில் ஒட்டு போட உரிமை உண்டு.ஆனால் ஒருவன் பணத்திற்க்கோ மிரட்டலுக்கோ பயந்து பணிந்து தன்மானத்தை அடகு வைத்து விடாதீர்கள். இறுதியாக உங்களிடம் வைக்கும் தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் இந்த நகராட்சி தேர்தல் மூலம் ஆதிக்கவாதிகளுக்கும்,அடக்குமுறையாளருக்கும் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் இந்த ஊரின் ஓய்ற்றுமை, ஐக்கியம்.பாதுகாக்க பட வேண்டும் என்ற அடிப்படையிலும் ஊர் நலனுக்காகவும் உங்கள் வாக்குகளை புத்தகத்திற்கு தந்து சகோதரி ஆபிதா பி.எஸ் சி பி.எட் அவர்களை வெற்றி பெற செய்து நல்ல நகராட்சி உருவாகிட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீதிக்கு போராடும் அன்பு சகோதரன் எஸ்.கே செய்யது இபுராஹீம் சமூக சேவகர் Add comment |