بسم الله الرحمن الرحيم
Thursday 22nd August 2019 | 20 துல்ஹஜ் 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
நகராட்சி தேர்தல்.. இது ஒரு திருவிளையாடல்! அச்சிடுகமின்-அஞ்சல்
18 அக்டோபர் 2011 மாலை 05:21

நேற்றைய (17/10)தினம் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் ஏகப்பட்ட பரபரப்பும் திருப்பங்களும் உள்ளடக்கியதாக மிக விறு விறுப்புடன் ஒரு வகையாக நடைபெற்று முடிந்தது.

IMG_6508_copy_copy_copy

இன்னும் சொல்லப்போனால் தேர்தல் அறிவிப்பு செய்த நாள் முதலாக நமதூரை என்றும் இல்லாத ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.கடந்த மூன்று நகராட்சி தேர்தலாக எவ்வித போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பேரவையின் புண்ணியத்தால் இம்முறை கடுமையான போட்டி போடும் நிலை உருவானது.

17102011011

ஏறத்தாழ அறுபது வருடங்களுக்கு பின் இப்படியான ஒரு கடும்போட்டி நிலையை நமதூர் மக்கள் சந்தித்திருக்கிறார்கள்.

IMG_6489

காலை ஏழு மணிக்கு வாக்கு பதிவு ஆரம்பமானாலும் தொடக்கத்தில் வாக்கு பதிவு மந்தமாகவே இருந்தது.பெரும்பாலான ஆன் வாக்கு சாவடிகள் வெறிச்சோடி இருந்தது.ஆனால் பெண்களுக்கான ஆரம்பம் முதலே வரிசையில் நின்றது,நேரம் செல்ல செல்ல ஆண்கள் பகுதியிலும் கூட்டம் சேர ஆரம்பித்தது.பேரவை வேட்பாளருக்காக அதன் ஊழியர்கள் ஆங்காங்கே நின்று பஸ் பஸ் என அனைவரையும் தங்களுக்கு ஓட்டு போட சொல்லி சிக்னல் செய்த காட்சிகள் நம் நகர்வல நிருபர்கள் காதில் விழுந்துகொண்டே இருந்தது.

IMG_6475_copy

சதுக்கை தெரு சென்டரல் பள்ளி வாக்கு சாவடிகள் என்றைக்குமே பதட்டம் நிறைந்தவை.இம்முறையும் அதற்க்கு பஞ்சமில்லை.பெண்கள் பகுதில் கள்ள ஓட்டுக்கள் போடுவதாக புகார் வந்ததையொட்டி நகர் வலம் அப்பள்ளியை நோக்கி நகர்ந்தது. அப்போது இரு பெண்கள் போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருன்தனர்.அதில் ஒரு பெண் இந்த ஊரின் முக்கிய பிரமுகரின் மகள் தன்னுடைய தங்கையின் ஓட்டை தான் போட்டே ஆகவேண்டும் என்று வெளிப்படையாகவே அந்த போலீசாரிடம் சண்டை போட்டு கலாட்டா  செய்துக்கொண்டிருந்தார்.

17102011007

இதை பார்த்ததும் அந்த பெண் மணியின் ஜனநாயக உணர்வின்?? மீது நமக்கு ஏற்பட்ட மரியாதை இருக்கின்றதே ஆஹா..நம்மை புல்லரிக்க செய்தது.

அதுபோன்று சதுக்கை தெரு ஆண்கள் வாக்கு சாவடியிலும் கள்ள ஓட்டுகள் போட சாரை சாரையாக வந்தனர்.ஒரு கட்டத்தில் ஐக்கிய பேரவையின் ஆதரவில் இயங்குவதாக சொல்லப்படும்  ஒரு ஜமாத்தின் பிரமுகரின் செல்வ புதல்வன்  கள்ள ஒட்டு போட வரும்போது போலீசாரிடம் பிடிப்பட்டார்.அவரை போலிஸ் வண்டியில் ஏற்றினர்.

IMG_6473

கள்ள வாக்கு ஆசாமிகள்  போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இதன் எதிர் ஒளியாகவோ என்னவோ குறிப்பிட்ட அந்த வாக்கு சாவடியில் ஆபிதாவின் தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றிய அதே பகுதியை சேர்ந்த சகோதரர் முஜம்மில் வாக்கு பதிவு முடிந்தவுடன் கடும் போலிஸ் பாதுகாப்புடன் வெளியே வர நேர்ந்தது.

வாக்கு பதிவு முடிந்த பிறகும் சென்டரல் பள்ளியின் முன்பு ஏராளமான பெண்களும்.ஆண்களும் திரண்டு நின்றபடி இருந்தனர்.அதுபோலவே முஹ்யத்தீன் ஸ்கூல் வாக்கு சாவடியிலும் பேரவை சார்ந்த கள்ள வாக்காளர்கள் பெரும் அளவில் உள்ளே அனுப்பிய வண்ணம் இருந்தது நமக்கு அதிர்ச்சியை அளித்தது.

guilty

தலைமை பொறுப்புக்கு போட்டியிடும் மக்கள் வேட்பாளர் சகோதரி ஆபிதா முஹயத்தீன் ஸ்கூல் சென்று ஏஜெண்டுகள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்பு தயவு செய்து கள்ள வோட்டு போடாதீர்! அது சட்ட படி குற்றம் மட்டுமல்ல ஜனநாயகத்திற்கு எதிரானது. நாளை மறுமையில் இறைவனிடம் கேள்வி கேட்க்கப்படுவோம் என்றெல்லாம் எச்சரித்து கூட சராமாரியாக பெண்களும்,ஆண்களும் கள்ள வோட்டு போட்டு குமித்தது ஒரு ஜனநாயக படுகொலை என்று நடு நிலையாளர்கள் அதிகாரிகளுக்கு  கேட்கும் படி பேசிக்கொண்டிருந்தார்கள்.

சகோதரி ஆபிதாவை அந்த வாக்கு சாவடிக்கு வெளிப்புறத்தில் தகாத கீழான வார்த்தைகளால் திட்டியது அதை கண்டு கொள்ளாமல் பொறுமையோடு சகோதரி ஆபிதா மறு வாக்கு சாவடிக்கு நகர்ந்தது நல்லதொரு நற்பண்பை உண்டாக்கியிருக்கிறது.

03102011001_copy_copy

அது போல தீவுத்தெரு பெண்கள் பள்ளி கூடத்தில் எட்டாவது வார்டிலும் பரவலாக கள்ள வோட்டுக்கள் தொடங்கின .கள்ள ஒட்டு வேட்டை நடந்ததை சாட்சியாக நகர்மன்ற தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும்  வேட்பாளரின் ஏஜென்டு (அஹ்மது முஹயத்தீன்) மூலம் நேரடி தகவல்களை பகிர்ந்துக்கொண்டோம். ஐக்கிய பேரவையின் சமீபத்திய சந்தர்ப்ப விசுவாசி திருவாளர் மா மன்னர் தன் மகனுக்கும் ஓட்டளித்த அசிங்கம் அரங்கேறியது.

அது சமயம் சகோதரர் பைசல் அவருக்கெதிராக சண்டையிட்டது பொதுமக்கள் மத்தியில் மேடை ஏறி பேரவைக்கு வக்காலத்து வாங்கிய மன்னரின் நாணயம் ?? ..சிதைந்து  போனது.

வாயை பொத்திக்கொண்டு அவமானம் தாங்கி கொள்ளாமல் குற்ற மன நிலையில் ஜாபிதாவையும் கையில் எடுத்துக்கொண்டு வாக்கு சாவடியை விட்டு வெளியேறி இருக்கிறார்.ஐக்கிய பேரவையின் பிரதான ஏஜெண்டு மன்னர்.

மீன் கடைக்கும்,கறி கடைக்கும், வங்கிகளுக்கும் முகத்தை நல்லபடி மூடி போகாத நமது தாய்க்குலங்கள் வாக்கு அளிக்க வரும்போது மட்டும் இரு கண்களை தவிர முகத்தை நல்லபடி மூடி பத்திரமாக வந்தனர்.

farda

அடையாளம் காண வேண்டும் என்பதற்காக வாக்கு சாவடியில் இருந்த பெண் ஊழியர்கள் அவர்கள் முகத்தை திறந்து காண்பிக்க சொன்னபோது அவர்களுக்கு சராமாரியாக அர்ச்சனைகள் விழுந்தது.

17102011008

ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் அமைந்திருந்த வாக்கு சாவடியில் காலையில் மிக மெதுவாக வாக்கு பதிவுகள் நடைபெற்றது.ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் காத்து நின்றபோதும் ஒரு மணி நேரத்திற்கு வெறும் பத்து வாக்குகள் மட்டுமே அங்கு பதிவு செய்யப்பட்டதாக நமக்கு தகவல் வந்தபோது நம் நகர்வலம் பெரிதும் அதிர்ச்சியில் அங்கு சென்றது.

IMG_6506_copy_copy_copy_copy

சில ஏகாதிபத்திய கைங்கரியத்தால் அதிகார வர்க்கத்தின் துணையோடு இந்த மோசடி நடைபெற்றதாக நமக்கு செய்திகள் கிடைத்தது..பல மணி நேரங்கள் காத்து நின்ற வாக்காளர்கள் எரிச்சலுடன் வீட்டுக்கு திரும்பி சென்றனர்.மாலை நான்கு மணிக்கு மேல் மீண்டும் வந்த அதிகமான  வாக்காளர்கள் ஒட்டுபோடாமல் ஜனநாயகத்தின் உரிமையை இழந்து வாசலுக்கு  வெளியே நின்றதை பார்க்க முடிந்தது. இதை அறிந்த மக்கள் வேட்பாளர் சகோதரி ஆபிதா அங்கு வந்து பார்வையிட்டார்.நேற்று மாலை மூன்று மணிக்கு பின்  தேர்தல்  பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சற்று வேகத்துடன் பணி செய்ய துவங்கினர்.

IMG_6497_copy_copy_copy

அதன் பிறகு அங்கு வாக்கு பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்றது.மாலை 7 மணி வரையிலும் அந்த வாக்குச்சாவடியில் "டோக்கன்" கொடுத்து வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இம்முறையும் சில ஆதிக்க சக்திகள்  நகருக்கு அப்பால் இருந்துக்கொண்டு   காயல் நகர வாக்காளர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருந்தனர். எப்போதும் போல "இன்ஸ்டன்ட்" வாக்காளர்களை ஒட்டு போடுவதற்காக  பேரூந்தில் சிலரும் ,இம்முறை புதிய யுக்தியை கையாண்டு அதாவது ரிசெர்வேசன் செய்யப்படாத கம்பார்ட்மெண்டில் அங்கிருந்து ஏராளமான "வாக்காளர்களை" மாணவர்களை காய்கறி மூட்டை போல் ரயிலில் அடைத்து அனுப்பிவைத்தனர்.அவ்வாறு வந்தவர்களுக்கு நகரில் நெடுஞ்சாலை தெருவில் உள்ள ஒரு பெருந்தலையின் வீட்டில் வைத்து தலைக்கு பெருந்தொகை 750/= வழங்கப்பட்டது.

rupees

வாக்காளர்களுக்கு சாராயம் வழங்கியதாக நாம் எழுதியபோது,அதை மறுத்து நம் மீது குறை சொன்னவர்கள் ஏராளம். நாமும் அதில் நமது முஸ்லிம் வாக்காளர்கள் என்று எதையும் குறிப்பிட்டு எழுதவில்லை:ஆனால் புறநகர் பகுதியில் வாழும் வாக்காளர்களுக்கு அது (சாராயம்) பாட்டில் பாட்டிலாக வழங்கப்பட்டுள்ளது.இதை நம்மிடம்  பகிர்ந்து கொண்ட ஒரு ஆசாரி தனக்கும் அது வழங்கப்பட்டதாகவும், ஆனால் தனக்கு அதில் நாட்டம் இல்லாததால் அதை தான் "வேண்டாம்" என மறுத்துவிட்டதாகவும் நம்மிடம் சொன்னார்.

IMG_6495

நகரின் பல இடங்களில் ஒருவருக்கொருவர் ஒட்டு போட்ட கள்ள விரல் மைகளை அழித்துகொண்டிருந்த அவலக்காட்சிகள் நம் கண்ணை மிரட்டியது. அதில் பெண்களும் விதி விலக்கல்ல..நன்மை கருதி இங்கே சில படங்கள் தவிர்க்கப்படுகிறது.

18102011018

நீண்ட தாடியும் தொப்பியும் போட்டுக்கொண்டு இந்த அல்ப வேலைகளை செய்வோரை தான் பேரவை தத்துப்பிளைகளாக வைத்துக்கொண்டிருக்கிறது.

எம்.எல்.ஏ, எம்.பி, எலெக்சனில் கூட இந்த அளவு பரபரப்பும் விறுவிறுப்பும் நமதூரில் காணப்படவில்லை.கடைகள்,ஹோடேல்க்கள் வணிக நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டிருந்தன.

இவற்றில் சில மாலையில் திறக்கப்பட்டன.மழையும் தன் பங்கிற்கு லேசான தூறலுடன் விடைபெற்றுச்சென்றது.மாலையில் வானம் இருண்டு காணப்பட்டபோதிலும் மழை ஏதும் இல்லை. பொதுமக்கள் ஆங்காங்கே கூடி நின்று தேர்தல் நிலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது.பலர் வாயிலிருந்தும் ஆபிதாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக வார்த்தைகள் வெளிவந்தன.

IMG_6510_copy_copy_copy

நகர்  மன்ற தேர்தலை மனதிற்கொண்டு ஐக்கியம் பேசும் சந்தர்ப்ப ஆசான்கள் சிலர் சற்று கலக்கத்துடன் வலம் வந்ததை நாம் கண்டோம்.பேரவையின் ஒரு பிரபல புள்ளி "போட்டி இவ்வளவு கடுமையாக இருக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை" என்றார். திறந்த வாக்குப் பெட்டியில் வாக்காளர்கள் எல்லோரும் பஸ்சுக்கு வாக்குகளை அள்ளி குவிப்பார்கள் என அவர் ஒரு வேளை எதிர்பாத்தாரோ என்னவோ.....!

அராஜகம்,வன்முறை என்பது  எதுவும் இல்லாமல் இந்த நகர்மன்ற தேர்தல் நடைபெற்ற போதிலும்,கள்ள வாக்குகள் போடப்பட்டதை "அராஜகம்" என்றே பொதுமக்கள் எண்ணுகின்றனர். அதற்காக வாக்காளர்கள் தயார்படுதப்பட்டதை "வன்முறை" என்றே எண்ணுகின்றனர்.

ஜனநாயகம்  மிளிர்ந்திட, பணநாயகம் வீழ்த்திட நம் நகர் ஒழுக்கம்,கலாச்சாரம் மற்றும் பண்பாடு பேணிட இன்னும் ஏராளமான பாடம் நாம் அனைவரும்  கற்க வேண்டியுள்ளது ! இன்ஷா அல்லாஹ் ...

ஆக்கம்: நகர் வல நிருபர்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com