நகர்மன்றத்தின் முன்னாள் தலைவி A.வஹீதா மீண்டும் போட்டியிட முடிவுசெய்துள்ளார்!அச்சிடுக
13 செப்டம்பர் 2011 மாலை 04:13

காயல்பட்டின நகர்மன்றத்தின் முன்னாள் தலைவி A.வஹீதா மீண்டும் போட்டியிட முடிவுசெய்துள்ளார். இது குறித்த கடிதத்தினை நகரில் உள்ள அனைத்து ஜமாஅத்துக்களுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

waheeda

பேரன்புடையீர்,

உங்கள் அன்புச் சகோதரி உடைய அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் காயல்பட்டணம் நகராட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளேன். அதற்காக எனக்கு அனைத்து ஜமாஅத் தலைவர்களும், ஊர் பொதுமக்களும் நல்லாதரவு வழங்கிட வேண்டுகிறேன். சென்ற 2001 - 2006 ஆண்டு காலங்களில் (என்னுடைய பதவி காலத்தில்) இந்நகரம் அடைந்த பலன்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளேன். எனவே ஆற்றிய பணிகளுக்கு அங்கீகாரமும், ஆற்ற வேண்டிய பணிகளுக்கு உங்களின் ஆலோசனையும் பெற ஆவலாய் இருக்கிறேன்.

மேலும் நமதூருக்கு அடிப்படை தேவையான குடி தண்ணீர், மின்சாரம் இவைகள் தங்கு தடையின்றி கிடைக்க பாடுபடுவேன். அதற்காக 2வது பைப் லைன் திட்டத்தையும், காயல் துணை மின் நிலையம் ஒன்றையும் அமைப்பதற்கும் பெரும்ப்பாடுபடுவேன். அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய பாடுபடுவேன். இதன் முயற்சியாக தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று திட்டத்தை நிறைவேற்றுவேன். மாண்புமிகு தமிழக முதல்வருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கின்ற காரணத்தால் இந்நகருக்குத் தேவையான அனைத்துக் காரியங்களையும் என் பணிக்காலத்தில் செய்து முடிப்பேன். எனவே தாங்கள் 2011 நகராட்சித் தேர்தலில் என்னை தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்க அன்பாய் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

இப்படிக்கு,

உங்கள் அன்பு சகோதரி,

ஏ .வஹீதா.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh