بسم الله الرحمن الرحيم
Tuesday 21st May 2019 | 16 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், முழு அரசு மரியாதையுடன் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம்!அச்சிடுகமின்-அஞ்சல்
06 டிசம்பர் 2016 மாலை 06:44

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், முழு அரசு மரியாதையுடன் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம்

. ஜெயலலிதாவின் உடல் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

மாலை 4.25 மணியளவில் ராணுவ வாகனம் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் நோக்கி புறப்பட்டது.

rajaji1_3099882a

அப்போது, அங்கு கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர்.

ராணுவ வாகனத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இருந்தனர். ஊர்வலத்தில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஊர்வலப் பாதையில் சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
ராஜாஜி அரங்கில் தொடங்கிய இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடைந்தது. அங்கு எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்திற்கு ஊர்வலம் சென்றடைந்தது. 

jaya_4

ராஜாஜி அரங்கில் தொடங்கிய இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடைந்தது. அங்கு எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்திற்கு ஊர்வலம் சென்றடைந்தது. 
jj_3099950f
ஜெயலலிதாவின் உடல் ராணுவ வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, அடக்கம் செய்யப்படும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சந்தனப்பேழையில் வைக்கப்பட்டது.

அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் இறுதி மரியாதை செலுத்தினார். முப்படை வீரர்களும் இறுதி மரியாதை செலுத்தினர். மத்திய அரசு சார்பில் வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். 

அதன்பின்னர் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், முன்னாள் கவர்னர் ரோசய்யா, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலிக்குப்பிற்கு அவர் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி எடுக்கப்பட்டு சசிகலாவிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா உடலுக்கு சசிகலா இறுதிச்சடங்கு செய்தார். அதன்பின்னர் 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் மாலை 6.07 மணிக்கு தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்கள் மூலம் ராணுவ மரியாதையுடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

jaya_burrial

ஜெயலலிதாவின் உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி , மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ்,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன்  இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமான் முன்னாள் பிரதமர் தேவே கவுடா, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெயலலிதாவின் உடலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் , ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக முத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ராஜாஜி அரங்கில் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள், வெள்ளம் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.

ஜெயலலிதா மறைவையொட்டி, தமிழகத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவை அடுத்து சென்னையில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

படங்கள் : தி இந்து மற்றும் தினமணி 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com