بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மருந்து கடைகளிலும் நாளையுடன் முடிவுக்கு வருகிறது பழைய 500 ரூபாய் நோட்டுகள்! வரும் 30ம் தேதி வரை, வங்கிகளில் மட்டுமே டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்!!அச்சிடுகமின்-அஞ்சல்
14 டிசம்பர் 2016 மாலை 01:45

பழைய 500 ரூபாய் நோட்டுகள் மருந்துக் கடைகளில் நாளை நள்ளிரவு வரை மட்டுமே பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடு வரை, பழைய 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தது. அதன்பின்னர் புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்படும் என அறிவித்தது. ஆனால், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைப்பதால், கடுமையான சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் போதிய பணம் நிரப்பப்படாததாலும், ஏ.டி.எம். மையங்கள் செயல்படாததாலும், பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், பழைய 500 ரூபாய் நோட்டுகள் மருந்துக் கடைகளில் நாளை நள்ளிரவு வரை மட்டுமே பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய 500 ரூபாய் நோட்டுகளை வரும் 30ம் தேதி வரை, வங்கிகளில் மட்டுமே டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com