بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதிக்க வேண்டும்! தேர்தல் ஆணையம் !!அச்சிடுகமின்-அஞ்சல்
18 டிசம்பர் 2016 மாலை 09:13

நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்கும் வகையில்  உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பணிகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் திரட்டும் நன்கொடைகளுக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் சார்பாக விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், அரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, பொதுமக்கள் பணங்களை வாரி வழங்குவதால், அரசியல் கட்சிகளுக்குத் தாராளமாக நிதி கிடைக்கிறது. இது கருப்புப் பணப் புழக்கத்திற்கு வழிவகுப்பதாக உள்ளது. எனவே, அரசியல் கட்சிகளுக்குத் தனிநபர் வழங்கும் நன்கொடை ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் இருக்கக்கூடாது என தடை விதிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நன்கொடையாக திரட்டப்படும் பணம் பெரும்பாலும் கணக்கில் காட்டப்படுவதில்லை என்பதால், அது கருப்புப் பணப்புழக்கத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் அளிக்கும் நன்கொடையை கட்சிகள் ஏற்பதை தடுப்பதற்கு சட்டத்தில் எந்த வாய்ப்புமில்லை. ஆனால், மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1951-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநித்துவ சட்டம் 29சி-ன் படி, அவ்வாறு வாங்கப்படும் பணம் குறித்து கட்சிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். அதுவும் ரூ.20 ஆயிரம் மேல் நன்கொடை பெற்றால் தேர்தல் ஆணையத்திற்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

வருமான வரிச் சட்டம் 13 ஏ-ன் படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே 20 ஆயிரத்துக்குள் வரி விலக்கு பெற முடியும். அதே போல, குறிப்பிட்ட காலவரையறைக்குள் நன்கொடைகள் பற்றி அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும். 20 ஆயிரத்துக்கும் மேல் நன்கொடை பெறும் அரசியல் கட்சிகள் நன்கொடை கொடுத்தவரின் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை சேகரித்து அதற்கு உரிய ஆவணங்களை பராமரிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா நேற்று தெரிவித்துள்ளார்.
    இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து  ரூ.2 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் மேல் நன்கொடை பெறுவதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறுகிற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

கறுப்புப் பணம் ஒழிக்கும் நடவடிக்கையாக, அரசியல் கட்சிகள் கடந்த 1996-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நன்கொடை அளிக்கும் நபர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதை சட்ட அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றொரு பரிந்துரையில் கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் வீடு போன்ற சொத்துக்கள், நன்கொடைகள், மூலதன வருவாய்கள், பிற இனங்களில் வருகிற வருவாய் போன்றவற்றின் மூலம் பெறும் வருமானத்துக்கு 1961 வருமான வரிச்சட்டம் 13 ஏ பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த கட்சிகள் தங்கள் வங்கி கணக்குகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து இருந்தால் அந்த தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வருமானத்துக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், அவற்றின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரி சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று கூறியது.

தற்போதைய நிலையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலான நன்கொடைகள் வாங்குதவற்கு மட்டும் உரிய ஆதாரங்கள் தேவை என மறைமுக சட்ட விதிகள் உள்ளன. ரூ.10 அல்லது ரூ.20 அளவிலான சிறிய தொகைகள் ஒரு பெரிய அளவிலான மதிப்பைக் கொண்ட ரூபாயாக மாறுவதால் நன்கொடை பெறுவதில் அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். இதன் ஒரு பகுதியாக நன்கொடை தொடர்பான கட்டுப்பாட்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com