بسم الله الرحمن الرحيم
Saturday 23rd March 2019 | 16 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது! பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்!!அச்சிடுகமின்-அஞ்சல்
07 ஜூன் 2017 காலை 02:39

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் அதிக வருவாய் ஈட்டும் 400 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு மாற்றும் வகையில் தனியார் பங்களிப்புடன் மறுமேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்த நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அதன் முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

jawahirulla

இந்திய ரயில்வேதுறை என்பது வெற்றிகரமாக இயங்கிவரும் துறையாகும். குறிப்பாக நிதிஷ் குமார் அதற்குப் பிறகு லாலுபிரசாத் ஆகியோர் ரயில்வே அமைச்சராக இருந்தபோது மிகவும் லாபம் ஈட்டும் துறையாக ரயில்வே துறை இருந்தது. லாபத்தை ஈட்டும் ஓர் அரசுத் துறையைத் தனியார் மயமாக்குவது என்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றது.

தனியார் மயமாக்கல் என்பது ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு வழிவகுத்து வேலைவாய்ப்பைக் குறைக்கும். தனியார் மயமாக்கலினால் சமூகநீதி கொள்கையான இடஒதுக்கீட்டுக் கொள்கையும் முழுமையாகப் பறிபோகும். மேலும், தனியார் மயமாக்கலால் பயணிகள் கட்டணம் உயரும். இதனால் கிராமப்புற மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், ஏழை எளியவர்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.

ரயில்வேத் துறையை தனியார்மயமாக்குவது என்பது ரயில்வேயின் நிர்வாகத் திறமையில் இயலாமையை வெளிக்காட்டுகிறது. அனைத்து அதிகாரங்களையும், பணியாளர் பலத்தையும் முழுவதுமாகப் பெற்றுள்ள ஓர் அரசுத் துறை சிறப்பாக இயங்க முடியாது என்றால் தனியார்த் துறையால் ரயில்வேயை சிறப்பாக எப்படி நடத்த முடியும் என்ற அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

ஏழை எளியவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தனியார் மயமாக்கல் என்ற திட்டம், அதிகாரத்தையும், பொருளாதாரத்தையும் ஓரிடத்தில் குவிப்பதற்கான செயலாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com