அப்போது தமீமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக நிலை குறித்து ஆழமாக விவாதித்தோம். தமிழகத்தின் எதிர்கால நலன் மற்றும் சமூக நீதியை குலைக்கும் பாஜகவின் சூழ்ச்சி வலையில் வீழ்ந்துவிடக்கூடாது. அதிமுகவை பிளவுபடுத்தும் முயற்சியில் பாஜக உள்ளது.
திராவிட கட்சிகளின் நலனை பாதுகாப்பது முக்கியம். இன்று அதிமுகவை அழிப்பார்கள் பின்னர் திமுகவை அழிப்பார்கள். கட்சியை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க அதிமுக பாதுகாக்கப்படவேண்டும். தங்களுக்கு யார் முதல்வர் என்பதை அதிமுக தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வெளியே இருப்பவர்கள் அல்ல.
அதிமுக பாதுகாக்கப்பட சகோதரர் டிடிவி தினகரனை அழைத்து பேச வேண்டும். இவ்வாறு தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.
தி இந்து
29 Aug 2017