بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அம்மா அணியின் ஆதரவாளர்கள் பங்கேற்பர்!அச்சிடுகமின்-அஞ்சல்
03 செப்டம்பர் 2017 மாலை 12:48

திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று திவாகரன் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, பிளஸ்-2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண் எடுத்திருந்தும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ கல்வி படிக்க இடம் கிடைக்காததால், மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரின் மரணம் தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மாணவி அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் திங்கட்கிழமை (நாளை) நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவி அனிதாவின் மரணத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றார். மேலும் அவர், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக அழைப்பு விடுத்துள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்றார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com