بسم الله الرحمن الرحيم
Wednesday 22nd May 2019 | 17 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
ஊழல் அரசியல்வாதிகள் மீண்டும் பதவிக்குத் திரும்பி விட முடிவது எப்படி? உச்ச நீதிமன்றம் கேள்வி!அச்சிடுகமின்-அஞ்சல்
12 செப்டம்பர் 2017 மாலை 09:13

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கும் அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்போதும் மீண்டும் பதவியில் அமர்கின்றனர். இதைத்தாம் கடந்த 25-30 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம், என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

லக்னோவை சேர்ந்த ‘லோக் பிரஹாரி’ என்ற அரசு சாரா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. “தேர்தல் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ததில் மக்களவை உறுப்பினர்கள் 26 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேர் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 257 பேரின் சொத்து மதிப்பு திடீர் என உயர்ந்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று இந்த அமைப்பு கோரியிருந்தது.

SC

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இது பற்றி கேள்வி எழுப்பும்போது, இரண்டு தேர்தல்களுக்கு இடையில் 5 ஆண்டுகளில் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு கடுமையாக உயர்வது திறமையற்ற விசாரணையினாலா அல்லது அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பினாலா என்றனர்.

“2014-ல் என்ன சொத்து என்று வெளியிடும் அரசியல்வாதி ஒருவரின் சொத்து மதிப்பு 2019-ல் 10 மடங்கு உயர்கிறது என்றால் அரசப்பதவியில் இருக்கும் ஒருவர் அப்பதவியைப் பயன்படுத்தி சொத்துக்களை அதிகரித்தாரா என்று விசாரணை நடத்த வேண்டாமா? கடந்த 5 ஆண்டுகளில் 1000% வருவாயில் உயர்வு காட்டும் வேட்பாளர் மீது விசாரணை நடத்த தகுந்த உபாயங்களைக் கையாளுங்கள்” என்று மத்திய அரசுக்கு நீதிபதி செலமேஸ்வர் அறிவுறுத்தினார்.

இதற்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பதிலளிக்கும் போது, எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.க்களின் வருமானத்திற்கான ஆதாரம் போலியாக இருக்கும் போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இதற்குப் பதில் அளித்த நீதிபதி செலமேஸ்வர், “கடந்த 25, 30 ஆண்டுகளாக இத்தகைய எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீது விசாரணை முகமைகள் நடவடிக்கை எதையும் எடுக்காததையே பார்த்து வருகிறோம். அவர்கள் மீண்டும் தங்கள் பதவியைப் பிடித்துக் கொள்கின்றனர், நாம் இது குறித்து கூடுதல் நடவடிக்கை எடுக்க இதுதானே சரியான தருணம்?” என்றார்.

மேலும் நீதிபதி செலமேஸ்வர் 1993 என்.என்.வோரா கமிட்டி அறிக்கையை அட்டர்னி ஜெனரலுக்குச் சுட்டிக்காட்டி, அரசியலை கிரிமினல் மயமாக்கும் போக்கையும் அரசியல்வாதிகள், கிரிமினல்கள், அதிகாரிகள் ஆகியோர் கொண்ட வலைப்பின்னலை அறிவுறுத்தினார்.

வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவிக்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், இவர்கள் மக்கள் பிரதிநிதிகள், தங்கள் சொத்து விவரங்களை ஏன் பொதுமக்களுக்கு வெளியிடக்கூடாது. இவர்களுக்கு சட்டம் ஏன் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரியவில்லை என்றார்.

“அவர்களது வருமான வரிக் கணக்கு விவரங்கள் கூட மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதியான இவர்கள், மக்கள் ஊழியர்கள் என்று கூறிக்கொள்ளும் போது சட்டப்பாதுகாப்பு ஏன் அளிக்க வேண்டும்?” என்றார்கள் நீதிபதிகள்.

இதற்குப் பதில் அளித்த வேணுகோபால், “வருமான வரிக் கணக்குகளை வெளியிட வேண்டும் என்றால் பாரபட்சம் காட்டுவதாக அரசியல்வாதிகள் கூறுவர், தகவலுரிமைச் சட்டத்தின் படி வருமான வரிக் கணக்குகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை, என்றார்.

இதற்கு செலமேஸ்வர் பதில் கூறும்போது, “நிச்சயம் அவர்கள் அம்மாதிரி கோருவார்கள், ஆனால் அவர்கள் வர்க்கத்தினுள் இன்னொரு வர்க்கத்தை உருவாக்கலாமா?” என்றார்.

ஒரு கட்டத்தில் வேணுகோபால், “அரசியல்கட்சிகளுக்கு நிதி நன்கொடை வழங்கும் தொழிலதிபர்கள் தங்கள் பெயர் வெளியே வர வேண்டாம் என்று விரும்புகின்றனர். எனவேதான் அவர்கள் காசோலைகளை வழங்குவதில்லை” என்றார்.

அரசியல்வாதிகள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் விரைவில் தீர்ப்பளிக்கப்பட வேண்டியதாகும் என்றனர் நீதிபதிகள்.

தி இந்து 

12 Sep 2017


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com