بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஊழலை எதிர்ப்பவர்கள் அனைவருமே தனது உறவினர்கள்: நடிகர் கமல் , டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு!!அச்சிடுகமின்-அஞ்சல்
21 செப்டம்பர் 2017 மாலை 10:32

ஊழலை எதிர்ப்பவர்கள் அனைவருமே தனது உறவினர்கள் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் மூலம் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் தனது நிலைப்பாட்டினைத் தெரிவித்து வருகிறார் நடிகர் கமலஹாசன். சமீப காலமாக அவர் ஆளும்கட்சிக்கு எதிராக டுவிட்டரில் தெரிவித்து வரும் கருத்துகள் அதிர்வலைகளை உண்டாக்கியும் உள்ளன.

அவர் அரசியல் தொடர்பான கருத்துகளைக் கூறி வருவதால், அவரின் அரசியல் பிரவேசம் குறித்து ஊகங்களும் வருகின்றன. டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால், கமலஹாசனைச் சந்திக்கவுள்ளதாக வந்த தகவலையடுத்து அவர் ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போறாரா அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா என எதிர்பார்ப்பும் எழுந்தது.

kamal-11-640x437

இந்நிலையில் சென்னை வந்திருந்த கெஜிர்வாலை, நடிகர் கமலஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் வரவேற்றார். இதன் பின்னர் நடிகர் கமலஹாசனின் வீட்டில் கெஜ்ரிவாலுடனான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதன் பின்னர் கமல் மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர்.

அப்போது பேசிய கமல், கெஜ்ரிவால் தன்னைச் சந்திக்க வேண்டும் என கேட்டதையே பாக்கியமாக கருதுவதாகத் தெரிவித்தார். தாங்கள் என்ன பேசியிருப்போம் என்பதை ஊடகங்காள் யூகிக்க முடியும் என்றார். ஊழலை எதிர்ப்பவர்கள் அனைவருமே தனது உறவினர்கள் என்றும், அந்த வகையில் கெஜ்ரிவாலும் தனது உறவினர் என்றும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தனி மனித என்ற முறையிலும் தான் கமலஹாசனின் ரசிகர் என்றார். ஊழல் மற்றும் மதவாதம் போன்ற பிரச்னைகளில் நாடு சிக்கியுள்ளதாகவும், இது குறித்து அனைவரும் பேச வேண்டும் என்றார். மதவாதத்திற்கு எதிராக கமல் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com