بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!!அச்சிடுகமின்-அஞ்சல்
10 அக்டோபர் 2017 மாலை 06:55

சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு அச்சாணியாக இருக்கும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

காயல்பட்டினத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி வருமாறு:

மத்தியில் பா.ஜ.க. பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மை சமுதாய மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. இங்கு பல்வேறு மொழி, இனம், கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்ட ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மக்கள் என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுகிறது.

இதற்காக மற்ற கட்சிகளைத் தடை செய்வது, உரிமைகளைப் பறிப்பது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, ஹஜ் பயணிகளுக்கு மானியத்தை நிறுத்துவது, சுற்றுலாத் தலங்களின் பெயர் பட்டியலிலிருந்து தாஜ்மஹால் பெயரை அகற்றியது, கல்விக் கொள்கைகளை மாற்றியது, இந்தி, சமஸ்கிருதம் மொழிகளைத் திணிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பா.ஜ.க. அரசு செயல்படுகிறது.

manadu_copy

தமிழக அரசும் இதைக் கண்டு கொள்ளாமல் மத்திய அரசை கண்மூடித்தனமாக ஆதரித்து வருகிறது.

காயல்பட்டினத்தில் வரும் அக்டோபர் 14-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிறுபான்மையினர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினரின் கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாத்திட இம்மாநாட்டில் உறுதிமொழி ஏற்கப்படும். இம்மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 250 பள்ளிவாசல் ஜமாஅத்கள் பங்கேற்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து வரும் 28-ம் தேதி கடலூரிலும், டிசம்பர் 23-ம் தேதி திருச்சியிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி கடையநல்லூரிலும் இம்மாநாடு நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இம்மாநாடு நடத்தி முடிக்கப்படும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த பாதிப்பு அதிகரித்து விட்டது.

அதிமுக அரசு, கட்சிக் குழப்பத்தை மட்டும் பார்க்காமல் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும். தமிழகத்திலுள்ள குழப்பமான சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்ற கவர்னர் இதற்குத் தீர்வு காண வேண்டும். தமிழக அரசு 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் அது தொடர்பாக அரசு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சியியினர் ஓரணியில் நின்று வலியுறுத்தி வருகிறோம்.

மேலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து ஜனநாயகத்தை செயல் இழக்க செய்துவிட்டனர். இவ்விஷயத்தில் தமிழக கவர்னர் எந்தவித நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் பாரபட்சமற்ற முறையில் ஜனநாயகத்தை தழைக்க செய்ய வேண்டும். மத்திய அரசு நதிநீர் பிரச்சினை, காவிரி நீர், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எந்த திட்டங்களுக்கும் தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு அச்சாணியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி இந்து 

10 Oct 2017

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com