بسم الله الرحمن الرحيم
Saturday 24th February 2018 | 08 ஜமாதுல் ஆஹிர் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!அச்சிடுகமின்-அஞ்சல்
29 நவம்பர் 2017 மாலை 12:09

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் எம்.ஆர்.எம்.ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்களது நிறுவனம் மலேசியாவிலிருந்து 53,334 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்துள்ளதாகவும், மொத்த மணலும் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, புதன்கிழமை (இன்று) நடைபெற்றது. அப்போது, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி, அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாத காலத்திற்குள் மூட வேண்டும் எனவும், புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மூலம், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், அதற்கான புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com