بسم الله الرحمن الرحيم
Monday 11th December 2017 | 22 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால், பேருந்து நிலையத்தில் ஆய்வு!!அச்சிடுகமின்-அஞ்சல்
06 டிசம்பர் 2017 மாலை 09:00

கோவையைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த மாதம் நவம்பர் 14ஆம் தேதியன்று, கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்குள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளோடு இணைந்து மாவட்டப் பணிகளை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அடுத்த நாள் (நவ.15) கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. மேலும் பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி நடத்தி வருவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதற்கு அரசியல் சாசன சட்டத்தின்படி ஆய்வு மேற்கொண்டதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கமளித்தார். ஆளுநரின் ஆய்வு நடவடிக்கையை அதிமுக அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

gover-696x510

இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால், பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகே உள்ள குடியிருப்புவாசிகளிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பேசினார். மாநில அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என யாரையும் அழைக்காமல், அரசு அதிகாரிகளை அழைத்துக் கொண்டு அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அரசு விருந்தினர் மாளிகையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அரசு அதிகாரிளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

தகவல்களில் உதவி: பீர் முஹம்மது 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com