بسم الله الرحمن الرحيم
Sunday 23rd September 2018 | 11 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
SDPI கட்சியின் சார்பாக பாபரி மசூதி மீட்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அச்சிடுகமின்-அஞ்சல்
06 டிசம்பர் 2017 மாலை 09:44

{npmultithumb}
#பாபரி மசூதி இடிப்பு தேசிய அவமானம்...

#பாபரி மசூதியை இடித்த இடத்திலேயே கட்டவேண்டும்..

#பாபரி மசூதி இடிப்பதற்கு காரணமாக இருந்த பாசிச சங்கப்பரிவார பா.ஜ.க வினரின் ஜனநாயக விரோத செயலுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும்..

#பாபரி மசூதியை மீட்டெடுக்கும் வரை இந்தியாவில் உள்ள அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைத்து போராடுவோம் என்கிற கோரிக்கைகளை முன்னிறுத்தி தேசம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் #SDPI கட்சியின் சார்பாக பாபரி மசூதி மீட்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

24775045_158711281408512_8267838319963665772_n-650x500

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் #SDPI கட்சியின் சார்பாக மாவட்ட தலைநகரில் உள்ள இராஜாஜி பூங்கா அருகில் 06/12/2017 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு #தூத்துக்குடி மாவட்ட தலைவர் M.ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி அவர்கள்தலைமை வகித்தார்கள்.

24899943_158711201408520_3610822874866015405_n-650x500

#பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா #தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாசுல் சமீர் அவர்களும், #நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் புதுக்குடி ராஜா அவர்களும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட #SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் முன்னிலை வகித்தனர்.

#SDPI கட்சியின் மாநில பேச்சாளர் K.S.சாகுல் ஹமீது உஸ்மானி அவர்களும், #வீசிக மாவட்ட செயலாளர் தோழர் முரசு தமிழப்பன் அவர்களும், அருட்பணியாளர் J.V.சுந்தரிமைந்தன் அவர்களும் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் M.மைதீன் கனி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

#SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.முஹம்மது தாஹிர் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

#தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து 40 க்கு மேற்பட்ட #பெண்களும் 300 க்கு மேற்பட்ட #ஆண்களும் திரளாக கலந்துகொண்டு பாபரி மசூதியை மீட்டெடுக்க போராடுவோம் என்கிற முழக்கமிட்டனர். மத்திய பாசிச அரசுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர்.

#முக்கியமாக காயல்பட்டினம் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒருசில ஊர்களில் வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். தங்கள் கடைகளை இன்று ஒருநாள் அடைத்தது இந்த போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தகவல்:

H.சம்சுதீன்,
மாவட்ட பொதுச்செயலாளர்,
#SDPI கட்சி - #தூத்துக்குடி மாவட்டம்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com