بسم الله الرحمن الرحيم
Wednesday 22nd May 2019 | 17 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
ஒகி புயல் பாதிப்புகள்’ : பிரதமரிடம் தமிழகம் கேட்ட 10 கோரிக்கைகள்!!அச்சிடுகமின்-அஞ்சல்
19 டிசம்பர் 2017 மாலை 10:53

சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்கும் பணிகளுக்கென 9,302 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டார்.

கடந்த நவ.30ஆம் தேதியன்று ஒகி புயலினால், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் இன்னும் கரை திரும்பவில்லை. மேலும், ஒகி புயலினால் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து, ஆறுதல் கூறவும், பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை (இன்று) பிற்பகலில் கன்னியாகுமரி வந்தார்.

modi3-696x454

அங்கு, விவசாயிகள் மற்றும் மீனவர் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இது தொடர்பான கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்தியமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரந்தரமாக புனரமைக்க மத்திய அரசிடம் நிவாரணம் கோரி விரிவான மனு ஒன்றினை அளித்தார்.

அதில்,

1) தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 747 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும்

2) தற்போது பேரிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், குறிப்பாக, உயிரிழப்பிற்கு ரூபாய் 4 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சமாகவும், ஊனமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தவும், வாழை மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 13,500/-லிருந்து ரூபாய் 1,25,000/- ஆகவும், ரப்பர் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18,000/-லிருந்து ரூபாய் 2,50,000/-ஆகவும் உயர்த்தப்பட வேண்டும்

3) புயல், காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்படும் உயர் அழுத்த மின்விநியோக கட்டமைப்பு, மின் மாற்றிகள், துணை மின்நிலையங்கள் மற்றும் 11 கிலோவோல்ட்டுக்கு அதிகமான உயர் மின்அழுத்த பாதைகள் ஆகியவற்றிற்கும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி அளிக்கப்பட வேண்டும்

4) மத்திய அரசின் 90 சதவிகித மான்யத்துடன், 1500 உயர் மின்அதிர்வெண் கம்பியில்லா தொலைதொடர்பு சாதனங்கள் (High Frequency wireless sets) வழங்கவும், தமிழ்நாட்டிலுள்ள கடலோரங்களில் உயர்மின் அதிர்வெண் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்கவும், உயர்மின் அதிர்வெண் சேனல்களை உபயோகிக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்

5) மீனவர்களுக்கு அவ்வப்போது வானிலை பற்றிய அறிவிப்புகளை தமிழில் தெரியப்படுத்த பிரத்யேக செயற்கை கோள் ரேடியோ அலைவரிசை (Dedicated Satellite Radio Channel) ஒன்றினை உடனடியாக அமைக்க வேண்டும்

6) மீனவர்களின் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக கன்னியாகுமரி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண தொலைதொடர்பு வசதி, மீன் பதப்படுத்தும் பூங்கா போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். மேலும், கடல் அரிப்பினை தடுக்கும் பொருட்டு, கடல் அலைதடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும். இப்பணிகளுக்கென 4,218 கோடி ரூபாய் வழங்க வேண்டும்

7) மீன் பிடிக்க சென்று நாளது தேதி வரை கரை திரும்பாத தமிழக மீனவர்கள் அனைவரையும் தேடி கண்டுபிடித்திட மத்திய பாதுகாப்புத் துறைக்கு மாண்புமிகு பாரத பிரதமர் உத்தரவிட வேண்டும். குறிப்பாக, ஆழ்கடலுக்கு சென்றுள்ள கடைசி மீனவர் கிடைக்கின்ற வரையில் தேடுதல் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்

8) ஒகி புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 5,255 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும்

9) மேலும், சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கவும், இனி சென்னைக்கு வெள்ளத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுவதற்கு 4,047 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும்.

10. ஆக மொத்தம், ஒகி புயல் பாதிப்புகள், சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்கும் பணிகளுக்கென 9,302 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com