بسم الله الرحمن الرحيم
Wednesday 25th April 2018 | 09 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நெல்லையில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனைத் திருவிழா வரும் பிப்ரவரி 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது!அச்சிடுகமின்-அஞ்சல்
29 ஜனவரி 2018 மாலை 12:14

 நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு மையம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை சார்பாக புத்தகவிழா நடக்க உள்ளது.

நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. திடலில் பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கும், இந்த விழா 11-ம் தேதி வரை நடக்க உள்ளது. அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி புத்தக விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், பொதுமக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும் புத்தகக் கண்காட்சி குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவும் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதனை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். 

இதுகுறித்து பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ‘’நெல்லையில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனைத் திருவிழா வரும் பிப்ரவரி 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடக்க உள்ளது. மொத்தம் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு 10 லட்சம் புத்தகங்கள் இடம் பெறும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் புத்தகத் திருவிழா குறித்து கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் வானொலி மற்றும் தொலைகாட்சிகளில் விளம்பரங்கள் செய்யப்படும். 

அத்துடன், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் நடமாடும் நூலகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, புத்தகக் கண்காட்சி நடத்தப்பட இருப்பது குறித்து மக்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தும்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com