بسم الله الرحمن الرحيم
Friday 06th December 2019 | 08 ரபீஉல் ஆஹிர் 1441AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
தமிழகத்தில் காலியாகவுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் அச்சிடுகமின்-அஞ்சல்
14 ஏப்ரல் 2019 மாலை 04:27

தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, உடனடியாக தேர்தல் பணிகளைத் தொடங்கும் வகையில், திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதன்படி,

திருப்பரங்குன்றம் – டாக்டர் சரவணன்

சூலூர் – பொங்கலூர் பழனிசாமி

அரவக்குறிச்சி – செந்தில்பாலாஜி

ஓட்டப்பிடாரம் – எம்.சி. சண்முகையா ஆகியோர் திமுக வேட்பாளராகப் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததால் இந்த தொகுதி காலியானது. இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்தான் டாக்டர் சரவணன்.

போஸ் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாகவே இந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. விசாரணை நடந்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்ததால் தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் திமுக சார்பில் டாக்டர் சரவணனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்து சூலூர் தொகுதி..

சூலூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்த ஆர். கனகராஜ். இவர் கடந்த மார்ச் மாதம் மாரப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, சூலூர் தொகுதி காலியானதாக சட்டப் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் அறிவித்தார்.

இதையடுத்து சூலூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, திமுக வேட்பாளராக பொங்கலூர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். பொங்கலூர் பழனிசாமி திமுக ஆட்சி காலத்தில் தமிழக அமைச்சராக இருந்தவர். இவர் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். சூலூர் தொகுதியில் ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்றிருந்ததால் இந்த தொகுதியைக் கைப்பற்றும் நோக்கில் இடைத் தேர்தலில் திமுக சார்பில் ஒரு பலமான வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அரவக்குறிச்சி – செந்தில்பாலாஜி..

அரவக்குறிச்சி தொகுதி செந்தில்பாலாஜி திமுகவில் இருந்து கிளம்பி, மீண்டும் திமுகவிலேயே ஐக்கியமானவர். இளமை பருவத்தில் அரசியல் ஆர்வம் மேலோங்க திமுகவில் இணைந்தவர்தான் கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்த செந்தில்பாலாஜி. பிறகு 2000ஆவது ஆண்டு அதிமுகவில் இணைந்து வளர்ச்சிகள் பல கண்டு 2006ல் கரூர் தொகுதி எம்எல்ஏ ஆகி, 2011ல் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2015ம் ஆண்டு அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செந்தில்பாலாஜி, பிறகு அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு அமமுகவுடன் இணைந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். அமமுகவிலும் கட்சிப் பதவிகள் வகித்து வந்த நிலையில், திடீரென அங்கிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார்.

தற்போது அவர் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற அரவக்குறிச்சி பேரவைத் தொகுதியிலேயே அவர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டப்பிடாரம் – எம்.சி. சண்முகையா

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளராக எம்.சி சண்முகையா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் திமுக மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் ஆற்றிய கட்சிப் பணியை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு ஓட்டப்பிடாரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2 முறை வெற்றி பெற்ற இடம். தற்போது அவர் மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் இருந்து போட்டியிடுவதால், திமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை, இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 10-ஆம் தேதி வெளியிட்டது. அத்துடன், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் 18 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதியில் (ஏப்.18) சேர்த்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை என ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சூலூர் பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கனகராஜ் திடீரென மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து, அந்த தொகுதியையும் சேர்த்து மொத்தம் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

இந்தச் சூழலில், 18 பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுடன் சேர்த்து திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தியது. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, மக்களவைத் தேர்தலின் 7-ஆவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மே 19-இல் இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com