தூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது!அச்சிடுக
12 ஜூலை 2019 காலை 10:53
இதுகுறித்து தூத்துக்குடி குறு, சிறு தொழில்கள் சங்க (துடிசியா) பொதுச் செயலர் ராஜ் செல்வின் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், தூத்துக்குடி குறு, சிறு தொழில்கள் சங்கமும் (துடிசியா) இணைந்து நடத்தும் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி முகாம் தூத்துக்குடியில் ஜூலை 17 ஆம் தேதி தொடங்குகிறது.
பயிற்சியின்போது, தொழிலின் வகைகள், தொழிலை தேர்ந்தெடுக்கும் முறைகள், தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல், அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறும் வழிமுறைகள், வங்கியின் எதிர்பார்ப்புகள், தொழில் தொடங்க தேவையான அரசு பதிவுகள், சந்தை ஆய்வு, வெற்றி பெற்ற தொழிலதிபர்களிடம் மற்றும் அரசு உயரதிகாரிகளிடம் நேரடியாக கலந்துரையாடல், சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவும் நவீன தொழில் நுட்பங்கள் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
பயிற்சியில் 18 வயது நிரம்பிய 8 ஆம் வகுப்பு முடித்த தொழில் ஆர்வம் உள்ள ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேரலாம். ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை 10 நாள்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை துடிசியா அலுவலகத்தில் பயிற்சி நடைபெறும்.
பயிற்சி முகாம் குறித்த தகவலுக்கு தூத்துக்குடி முத்தம்மாள்காலனியில் உள்ள துடிசியா அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது 0461-2347005 என்ற தொலைபேசி எண்ணிலும், 98401-58943 மற்றும் 77087-84867 என்ற செல்ப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh