بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right
திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் நடிகர் சரத்குமார் தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்!அச்சிடுகமின்-அஞ்சல்
09 ஏப்ரல் 2016 மாலை 11:38

தமிழக சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணியில் அக்கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு சரத்குமார் போட்டியிடுகிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று ஏப்ரல் 09 ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கினார்.

sarathkumar

பிரச்சாரம் தொடங்கும் முன்னர் திருச்செந்தூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தை கோவில் சன்னதி தெருவில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க.- ச.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

sarath

ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், 

திருச்செந்தூர் தொகுதியை வளமிக்கதாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்வேன். இத்தொகுதியின் குறைபாடுகளை கண்டறிந்து கூடிய விரைவில் மேம்பாடுகளை செய்ய உள்ளேன்.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றார்.

படங்கள்: ஷேக் அப்துல் காதிர் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com