بسم الله الرحمن الرحيم
Monday 25th March 2019 | 18 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right
சட்டமன்ற தேர்தல் நிலவரம் குறித்து தனியார் நிறுவன பெயரில் சர்வே! பொதுமக்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!!அச்சிடுகமின்-அஞ்சல்
11 ஏப்ரல் 2016 மாலை 04:08

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில் காயல்பட்டினத்தில் டில்லியை தலைமையமாக கொண்ட தனியார் நிறுவனம் ANGLE RESEARCH என்ற பெயரின் கீழ குழுவாக ஊருக்கு வருகை புரிந்து காயல்பட்டினத்தின் அனைத்து வார்டுகளின் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் சர்வே நடைபெறுவதாக பரவலாக புகார் வந்ததை தொடர்ந்து, சர்வே எடுப்பவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு விசாரிக்கையில் முன்னுக்கு முரணான தகவல்களை அளித்ததாக தெரிகிறது.

EL_SURVEY

இதனிடையே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்ட நிலையில் பறக்கும் படையினர் சம்பவ இடம் விரைந்து வந்து, சமந்தப்பட்ட சர்வே எடுத்த நபர்களை விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

கீழ்காணும் முறையில் தனியார் நிறுவனம் சர்வே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

cats_copy_copy_copy_copy

சர்வே எடுத்த தனியார் நிறுவன முகவர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் வெவேறு தகவல்களை கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் தனியார் ஆட்டோவில் சர்வே எடுக்கும் ஆவணங்கள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து காவலதுறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் வட்டாச்சியர் வள்ளி கண்ணு தலைமையில் விசாரணை மேற்கொள்ள்ளவிருப்பதாக தெரிவித்தனர்.

தகவல் : ஷம்சுத்தீன் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com