بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right
திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு!!அச்சிடுகமின்-அஞ்சல்
25 ஏப்ரல் 2016 மாலை 10:29

தமிழகத்தில் மொத்துமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடந்தே போய் மக்கள் சென்றடைவது என்பதுதான் அவரது நோக்கம். நடைப் பயண தேர்தல் பிரச்சாரம் போகும்போதே அவ்வப்போது ஆட்டோக்களிலும், ஸ்கூட்டர்களிலும், ஏன் சைக்கிளிலும் கூட ஸ்டாலின் பயணிக்கிறார்.

stalin

ஜெயலலிதா ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லுவது ஒருபுறமென்றால், திமுக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யப்படும் என்பதை மக்களிடம் விளக்குவதும், மக்களின் உண்மையான பிரச்சனைகளை நேரடி அனுபவத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளுவதும் பயண நோக்கமாக இருப்பதாக கூறுகிறார்.

IMG_20160425_094401830

இதன் வரிசையில் திருச்செந்தூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை முதல் திருச்செந்தூர் கடற்கரை மணற்பரப்பு மற்றும் முக்கிய வீதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு வந்ததை ஊடகங்களில் நேரலை காண்பிக்கப்பட்டது.

muka

இதனைத் தொடர்ந்து காயல்பட்டினத்தில் இன்று மாலை பிரச்சார வாகனத்தில் நின்றபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

dm1_copy

pal

dm2_copy_copy

ஸ்டாலின் உடன் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், நகர திமுக கட்சி நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் திரண்டிருந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் நகரில் முக்கிய பிரமுகர்களை நேற்று முதல் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com