بسم الله الرحمن الرحيم
Saturday 20th October 2018 | 09 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right
அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தலை முஸ்லிம்களின் நோன்பு காலத்தில் நடத்தக் கூடாது! எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!!அச்சிடுகமின்-அஞ்சல்
25 மே 2016 மாலை 03:11

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தலை முஸ்லிம்களின் நோன்பு காலத்தில் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

sdpi-696x398

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மே16 ஆம் நாள் தமிழக சட்டசபை தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் நடந்தநிலையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலை மட்டும் அந்த தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாகக் கூறி, அந்த தொகுதிகளில் மே 23 ல் தேர்தலை நடத்துவதாக அறிவித்துவிட்டு, பிறகு மீண்டும் ஜூன் 13ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

முஸ்லீம்களின் நோன்பு காலமான ரமழான் மாதம் ஜூன் 6ம் தேதி துவங்க உள்ள நிலையில், நோன்பு காலத்தில் இத்தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. அரவக்குறிச்சியில் 35 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களும், தஞ்சாவூரில் 25 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களும் உள்ள நிலையில், நோன்பு நேரத்தில் முஸ்லிம்கள் வாக்களிக்க செல்வதற்கும் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கும் பெருத்த சிரமத்தை இது ஏற்படுத்தும். இதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக தேர்தலை நோன்பு காலத்திற்கு முன்போ அல்லது பின்போ நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

தேர்தல் ஆணையம் இக்கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். உடனடியாக இக்கோரிக்கையை பரிசீலித்து, தேர்தல் ஆணையம் தனது நிலையை மாற்றிக்கொள்ளா விட்டால் எஸ்.டி.பி.ஐ. கட்சி உயர் நீதிமன்றத்தை அணுகும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com