بسم الله الرحمن الرحيم
Friday 21st September 2018 | 10 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right
கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளருக்கு வாழ்த்து செய்தி!அச்சிடுகமின்-அஞ்சல்
25 மே 2016 மாலை 03:19

நடைபெற்று முடிந்த 2016 சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், நமதூரைச் சார்ந்தவருமான சகோதரர் KAMஅபூபக்கர் அவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சற்றொப்ப 35 ஆண்டுகளுக்கு முன்னரும், அதன்பிறகு, இரண்டாவது முறையாக 25 ஆண்டுகளுக்கு முன்னரும் வரவிருந்த இந்த வாய்ப்பு நமதூருக்கு வராமலே போயின.  

நீண்ட வருடங்களுக்குப்பிறகு நமதூருக்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவும், சமுதாயத்திற்கு கிடைத்த  சிறந்த பிரதிநிதித்துவமாகவும் இவருடைய வெற்றியை நாம் கருதுகிறோம்.  மேலும், நமதூரின் ‘முதல் சட்டமன்ற உறுப்பினர்’ என்ற சிறப்புப் பெயரையும் இவர் பெற்றிருப்பது இன்னும் மகிழ்ச்சியை தருகின்றது.

மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் KAM அபூபக்கர் அவர்கள், தம்மை தேர்ந்தெடுத்த கடையநல்லூர் தொகுதி மக்களுக்காகவும், நமதூர் மக்களுக்காகவும், சிறுபான்மை சமூக மக்களுக்காகவும் சட்டமன்றத்தில்  உரிமைக்குரல் எழுப்பவும், இறைவன் அளித்த இந்த அமானிதப் பொறுப்பை தம்முடைய பதவிக்காலங்களில் செவ்வனே நிறைவேற்றவும் வல்லோனாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

JSA புஹாரி 

தலைவர் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com