திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.!அச்சிடுக
25 மே 2016 மாலை 03:30

15-வது சட்டப் பேரவையில் திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை சக்கர நாற்காலியில் வந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

திருவாரூர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதி சக்கர நாற்காலியில் வந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். கருணாநிதி 13-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர், முன்னாள் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடமை உள்ளதால் சட்டப்பேரவைக்கு வந்தேன் என்றார். தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு எதிரான ஆணையம் போல் செயல்படுகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்திலும் வென்றன. திமுக கூட்டணி 98 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

கடந்த 1991,2001, 2011 ஆகிய ஆண்டுகளில் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த போது கருணாநிதி முதல் நாள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. சபாநாயகர் அறைக்கு சென்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டது நினைவுகூரத்தக்கது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh