தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!! அச்சிடுக
17 அக்டோபர் 2016 மாலை 10:23

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது . இதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கும், நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு உள்ளிட்ட இந்த நான்கு தொகுதிகளுக்கும், அக்டோபர் 26ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 2ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற நவம்பர் 5ம் தேதி கடைசி நாளாகும்.

நவம்பர் 5ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

நவம்பர் 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தகவலை டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்தது .

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh