காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் சேவையை பயன்படுத்திக்கொள்ள, நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக - விழிப்புணர்வு பிரசுரம்அச்சிடுக
04 நவம்பர் 2016 மாலை 11:48

 

இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் (CARDIAC), நீரிழிவு நோய் (DIABETES), நாட்பட்ட நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் (LIVER DISEASES), புற்று நோய் (CANCER) போன்றவை தொற்றும் தன்மையற்ற நோய்கள் (NCD) ஆகும். இவை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது.
உலகில் அதிகளவு உயிர்கொல்லி  நோய் வகைகளாக தொற்றும் தன்மையற்ற நோய்கள் (NCD) மாறி வருகின்றன.
மத்திய - மாநில அரசுகள் , இதனை எதிர்கொள்ள திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் - காயல்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில், இதற்கான நிரந்தர மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
தினமும் - காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் இந்த மையத்தில் -  பொது மக்கள் இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளலாம்.
இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம், ECG போன்ற பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் பல ரூபாய் மதிப்பிலான மருந்துகளும் - இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த இலவச சேவையை அதிகமான மக்கள் பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில், நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக - விழிப்புணர்வு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
ncd

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh