بسم الله الرحمن الرحيم
Wednesday 22nd May 2019 | 17 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right
ஏழு அம்ச அவசிய கோரிக்கைகளை மனுவாக காயல்பட்டினம் நகர்மன்றதிற்கு அளித்தது நகர எஸ்.டி.பி.ஐ கட்சி! அச்சிடுகமின்-அஞ்சல்
05 நவம்பர் 2016 காலை 12:45

தூத்துக்குடி மாவட்டம SDPI கட்சியின் காயல்பட்டிணம் நகரம் சார்பாக நகர்மன்ற பொறுப்பு தனி அதிகாரி சந்திப்பு நடைபெற்றது...

காயல்பட்டிணத்தில் கடந்த பருவமழையில் மழைநீர் தேங்கியதால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில்கொண்டு இந்த வருடத்தின் பருவமழை காலங்களில் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், பழுதடைந்த சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான தற்காலிகமான முயற்சிகள் எடுப்பதற்கும், ப்பரப்பள்ளி குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்துவது மேலும் பெருகிவரும்  நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்துவது குறித்த ஏழு விதமான கோரிக்கைகளை 04/11/2016 வெள்ளிக்கிழமை அன்று காயல்பட்டிணம் SDPI கட்சியின்  நிர்வாகிகளும், கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் H.சம்சுதீன் தலைமையில் நகர்மன்ற பொறுப்பு தனி அதிகாரி அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்..

sdp_manu

இந்த கோரிக்கையை பரிசீலித்து தேவைப்பட்டால் SDPI கட்சியின் செயல்வீரர்களை மழைக்கால அவசர காலங்களில் பயன்படுத்துவதும், முக்கியமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாகவும் அதிகாரிகள் வாக்குறுதி தந்தனர். இந்த சந்திப்பில் SDPI கட்சியின் நகர மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் SDPI கட்சியின் காயல்பட்டிணம் நகரம் சார்பில் இன்று அனைத்து ஜும்ஆ பள்ளிகளின் மழைக்கால விழிப்புணர்வு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. .

தகவல்:  A.முஹம்மது உமர் , நகர தலைவர் 

  SDPI கட்சி , காயல்பட்டிணம்.
   தூத்துக்குடி மாவட்டம.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com