உங்கள் ரேஷன் அட்டையோடு மொபைல் எண் / ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? எளிதாக அறிந்திட - நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் - kayal.org இணையதளத்தில் பிரத்தியேக சேவை அறிமுகம்! அச்சிடுக
20 நவம்பர் 2016 மாலை 09:59

தமிழக அரசு - இன்னும் சில மாதங்களில் - ரேஷன் அட்டையை, ஸ்மார்ட் கார்டாக  மாற்றவுள்ளது.  ஸ்மார்ட் அட்டை பெற்றிட - ரேஷன் அட்டையுடன், பயனாளிகள் - தங்கள் ஆதார் எண்களையும், மொபைல் எண்களையும் - இணைக்கவேண்டும்.

உங்கள் ரேஷன் அட்டையுடன், மொபைல் எண் மற்றும் குடும்ப தலைவரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என எளிதாக அறிந்திட, நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் - இணையத்தில்  புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

அந்த சேவையை பயன்படுத்த முகவரி -

http://www.kayal.org/ration

இந்த சேவை மூலம், உங்கள் ரேஷன் அட்டை எண்ணை சமர்ப்பித்து - மொபைல் இணைப்பு / ஆதார் எண் இணைப்பு தற்போதைய நிலை உட்பட பல்வேறு தகவல்களை தாங்கள் பெறலாம்.

rt_card

இந்த சேவை  - தமிழக அரசின் www.tnpds.com என்ற இணையதளம் மூலம்,  நவம்பர் 18, 2016 அன்று பெறப்பட்ட  தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது வரை தங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்களை -ரேஷன் அட்டையோடு இணைக்காத பயனாளிகளுக்கு, நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் - தங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்களை இணைத்திட - சிறப்பு ஏற்பாடுகள், இறைவன் நாடினால் செய்ய உள்ளது என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம்.

http://www.kayal.org/ration

தகவல்:   

நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh