கோயம்புத்தூரில் நடைபெறும் "தனம்" கோப்பைக்கான Academy அளவிலான கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் 12 வயதுக்குற்பட்டவர்கள் அணி பங்கேற்பு!அச்சிடுக
27 நவம்பர் 2016 மாலை 03:05

பயிற்சி மையம் (Academy) அளவில் 12 வயதுக்குற்பட்ட இளம் வீரர்கள் பங்கேற்கும் ”தனம்” கோப்பைக்கான கால்பந்து போட்டி கோயம்புத்தூரில் இன்று (26/11/2016) முதல் நடைபெற்று வருகின்றது.

இந்த ஐவர் கால்பந்து போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. 4 அணிகள் கொண்ட 4 குரூப்பாக பிரிக்கப்பட்டு, முதல் சுற்று முற்றிலும் லீக் முறையில் நடைபெறுகின்றது. ஒவ்வொறு பிரிவிலும் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.

v_c_copy

இப்போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று (25/11/2016) இரவு 8 மணியளவில் காயல்பட்டினம் ”வீ-யூனைடெட்" ஸ்போட்ஸ் அக்கடமியைச் சேர்ந்த 3 அணியினர்கள் வேன் மூலம் கோயம்புத்தூர் அனுப்பி வைக்கப்படனர்.

அணி வீரர்களை ”வீ-யூனைடெட்” பயிற்சி மையத்தின் பொறுப்பாளர்கள் சகோ. ஜஹாங்கிர், சகோ. சொளுக்கு முஹம்மது தம்பி, சகோ. சேக் முஹம்மது, சகோ. ஜவஹர், பயிற்சியாளர் சகோ. இஸ்மாயில் மற்றும் இளம் வீரர்களின் பெற்றோர்கள் வழியனுப்பினார்கள்.

இன்று காலை நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற ”வீ-யூனைடெட்” அகடமி அணியினர் கோல் ஏதுமின்றி முதல் போட்டியை சமன் செய்துள்ளனர். தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தகவல்: எம். ஜஹாங்கீர் 

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh