بسم الله الرحمن الرحيم
Friday 18th January 2019 | 11 ஜமாதுல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right
காயல்பட்டினம் உட்பட திருச்செந்தூர் தாலுகாவில் சுமார் 6000 ரேஷன் அட்டைகளுக்கு தற்காலிகமாக தடை! அச்சிடுகமின்-அஞ்சல்
27 நவம்பர் 2016 மாலை 03:29

தமிழக அரசு விரைவில் - பயோமெட்ரிக் முறையில், ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை அறிமுகப்படுத்த உள்ளதை தாங்கள் அறிவீர்கள். அதற்கு முன்பாக, ரேஷன் அட்டை பயன்படுத்துவோரின் மொபைல் எண்ணையும், ஆதார் எண்களையும் - ரேஷன் அட்டையுடன் இணைக்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.

இதுவரை - ரேஷன் அட்டையில் உள்ள பயனாளிகளில் -  ஒருவரின் ஆதார் எண் கூட இணைக்கப்படாத ரேஷன் அட்டைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் - இது போன்ற ரேஷன் அட்டையுடன் நேற்று பொருட்கள் வாங்க  சென்ற  பலருக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படவில்லை.

இந்த நடவடிக்கையால் - சுமார் 6000 ரேஷன் அட்டைகள், திருச்செந்தூர் தாலுகாவில்  பாதிக்கப்பட்டுள்ளன. காயல்பட்டினத்திலும் பலர் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காயல்பட்டினத்தில் பாதிக்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகள் விபரத்தை நடப்பது என்ன? குழுமம் விரைவில் வெளியிடும், இறைவன் நாடினால். மேலும் - இந்த குறைகளை நீக்குவதற்கான வழிமுறைகளையும், நடப்பது என்ன? குழுமம் - இறைவன் நாடினால் -  விரைவில் அறிவிக்கும்.

தகவல் : நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com