بسم الله الرحمن الرحيم
Friday 21st September 2018 | 10 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right
நவ.28, மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சிகள் நடத்தும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி முழு ஆதரவு!அச்சிடுகமின்-அஞ்சல்
27 நவம்பர் 2016 மாலை 10:40

 மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சிகள் நடத்தும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ  கட்சி முழு  ஆதரவு என அதன் மாநில தலைவர் 

தெகலான்  பாகவி  அறிவிப்பு

நாளைய முழு அடைப்பு போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்கும். 

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது  என அறிவித்த பாஜக தலைமையிலான மத்திய மோடி அரசை கண்டித்து நாளை நடைபெற உள்ள தேசம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி முழு ஆதரவு அளிக்கிறது.

பாஜக தலைமையிலான மத்திய மோடி  அரசானது எந்த விதமான முன்னேற்பாடுகளும் செய்யாமல் திடீரென இவ்வாறு அறிவித்தன் விளைவாக நாடே ஸ்தம்பித்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும்  விரோதமான மத்திய அரசின்  இந்த  முடிவுக்கு எதிராக  அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு கண்டித்து வருகின்றன.ஆனால் மத்திய  அரசோ கேட்கும் மனநிலையில் தயாராக இல்லை.

தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் அறிவிக்கப்பட்ட இந்த  திடீர் அறிவிப்பால் மக்களின் அன்றாட வாழ்க்கையே முடங்கியுள்ளது. உணவு தானியங்கள் உள்ளிட்ட நாட்டின் உற்பத்திகள் வெகுவாக குறைந்துள்ளது.தொழிற்சாலைகள் இயங்க வில்லை.

போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.வணிகர்கள் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர்.தங்களது சொந்த பணத்தை மாற்றுவதற்காக நாட்டின் குடிமக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் முன்பாக வீதிகளில் மணிக்கணக்கில் நிற்கும் அவல நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.கூட்ட நெரிசலில் சிக்கி  இதுவரை எழுபதுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

எனவே மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோத போக்கை கண்டித்து நாளை 28.11.2016 அன்று தேசம் தழுவிய அளவில்  முழுஅடைப்பு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

இந்த முழு அடைப்பு என்பது மத்திய அரசு தனது மக்கள் விரோத முடிவை மறுபரிசீலனை செய்து மக்கள் விரும்புகின்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆட்சி புரிய வேண்டும் என்பதற்கான இறுதி எச்சரிக்கை ஆகும்.

எனவே நாளை நடைபெற உள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆற்றல் மிகுந்த தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். மேலும் பொது மக்கள், வியாபாரிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இந்த தேசம் தழுவிய இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததை எஸ்.டி.பி.ஐ கட்சி துவக்கத்திலிருந்தே எதிர்த்து வருகிறது. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு  நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும்  விரோதமான மத்திய அரசின்  இந்த  முடிவுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தகவல்: சம்சுதீன் 

தூத்துக்குடி மாவட்ட செயலர் , 

எஸ்.டி.பி.ஐ கட்சி

பி.எஸ்.ஐ.கனி

மாநில ஊடகத்துறை

எஸ்.டி.பி.ஐ கட்சி - தமிழ்நாடு

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com