அல்ஜாமிவில் அஸ்ஹரில் நடைபெற்ற மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன போட்டியில் 12 வயது நிரம்பிய இளம் ஹாஃபிழ் முதலிடத்தை பெற்றார்!!அச்சிடுக
28 நவம்பர் 2016 காலை 10:34

அல்ஜாமிவில் அஸ்ஹரில் நடைபெற்ற மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன போட்டியில் 12 வயது நிரம்பிய இளம் ஹாஃபிழ் முதலிடத்தை பெற்றார்!!

காயல்பட்டினம் அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன திறனாய்வு போட்டி நடைபெற்றது.

azh2

இப்போட்டியில் கலந்துக்கொள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான ஹாஃபிழ் மாணவர்கள் கலந்துககொண்டனர்.

குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, குமரி, தஞ்சை, திருச்சி, சென்னை, வட ஆற்காடு, திண்டுக்கல், அரவக்குறிச்சி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் போட்டியில் கலந்துக் கொண்டனர்.

azh1

திருக்குர்ஆன் மனன போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. முப்பது, பதினைந்து மற்றும் ஐந்து ஜுஸ்வுகள் என நடத்தப்பட்டது.

குறிப்பாக ஐந்து மற்றும் பதினைந்து ஜுஸ்வு மனன போட்டி தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டத்தை உள்ளடக்கி நடைபெற்றது.

இருதினங்களாக நடைபெற்ற மனன திறனாய்வின் இறுதி சுற்று நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற்று மாநிலத்தில் முதல் மூன்று இடத்தை பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் அறிவிக்கப்பட்டது. வெற்றிக்கு முயன்றோருக்கு 12 ஆம் தேதி இரவே ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டு, ஹாஃபிழ் மாணவர்களுக்கு அஷ்ஷெய்க் முபாரக் மதனி அவர்களால் நல்லுபதேமும் வழங்கப்பட்டது.

console_prize

இருதினங்களாக நடைபெற்ற போட்டிகளுக்கு நீதிபதியாக தமிழகத்தின் தலைசிறந்த ஆலிம், ஹாஃபிழ்களான ஜாபிர் மவுலவி, காரீ நவ்ஃபல் உமரி, காரீ மலீஹுர்ரஹ்மான் உமரி, ஜஹீர் அஹமத் உமரி ஆகியோர் திருக்குர்ஆன் மனன போட்டிக்கான நடுவராக இடம்பெற்று சிறப்பாக வழிநடத்தினர்.

அவர்களுக்கு அல்ஜாமிவுல் அஸ்ஹர் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

மாநிலம் தழுவிய 30 ஜுஸ்விற்கான போட்டியில் வட ஆற்காடு மாவட்டம் உமராபாத் தாருஸ்ஸலாம் மாணவர் ஹாஃபிழ் அஸ்லம் (வயது 12) மாநிலத்தின் முதல் பரிசு ரொக்கம் ரூபாய் 40,000 த்தை இறைவனின் நாட்டத்துடன் தட்டி சென்றார். இரண்டாம் பரிசை அதே மத்ரஸா ஹாஃபிழ் மாணவர் அப்துல் கவி ரொக்க பரிசு 30,000 த்தை இறைவனின் நாட்டத்துடன் பெற்று வெற்றி பெற்றார். மூன்றாம் பரிசை திருச்சி ஜாமியா அன்வாருல் உலூம் ஹாஃபிழ் மாணவர் முஹம்மத் ஸாலிஹ் ரொக்க பரிசு 20,000 த்தை இறைவனின் நாட்டத்துடன் வென்று அவரது மத்ரஸாவிற்கு நற்பயர் பெற்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.

azh5

அதுபோன்று பதினைந்து ஜூஸ்வுக்கான போட்டியில் ஹாஃபிழ் மாணவர்கள் முஜம்மில் ரஹ்மான், ( முதல் பரிசு)முஹம்மது தமீம், ( இரண்டாம் பரிசு)ஏ.எம் ரஜீன் ( மூன்றாம் பரிசு) ஆகியோர் பரிசுகளையும் வென்று சிறப்பித்து உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்

ஐந்து ஜுஸ்விற்க்கான போட்டியில் நாகர்கோவில் ஃபிர்தவுஸியா ஹாஃபிழ் மாணவர்கள் மூவர் அர்ஷத் ஃபிர்னாஸ் , ஆதில்அப்துர் ரஹ்மான் , அஹ்மதுல் அஷ்ரஃப் ஆகியோர் இறைவன் நட்டத்துடன் முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றி உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சியின் இரண்டாம் தினத்தின் மாலை வேலையில் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. பரிசளிப்பு நிகழ்ச்சியின் துவக்கமாக துணைத்தலைவர் ஹாஜி எஸ். இப்னு சவூத் நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு மஸ்ஜிதின் தலைவர் ஹாஜி அபுல் ஹசன் கலாமி, சிறப்பு விருந்தினர் அஷ் ஷெய்க் முபாரக் மதனி, அல் ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் அப்துல் மஜீத் மகளறி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரிசளிப்புக்கு முன்னதாக சிறப்பு விருந்தினரில் ஒருவரான அஷ் ஷெய்க் முஜீப் ரஹ்மான் உமரி ஓதுங்கள்..உயருங்கள் என்ற தலைப்பில் அழகுற சிறப்புரையாற்றினார்.

அவரது உரைகளில் இருந்து பொதுமக்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அஷ் ஷெய்க் நூஹ் அல்தாஃபி ஆறு கேள்விகளை கேட்டார்கள்.

 சரியாக பதில் அளித்தவர்களுக்கு பரிசளிப்பு வழங்கப்பட்டது.

இறுதியாக போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர் ஆகியோர் ரொக்க பரிசுகளை காசோலையாக வழங்கினர்.  இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் சகோதரரர் இஸ்மாயீல் இறுதி வரை தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர்களை  திருக்குர்ஆன் ஓதி காண்பிக்க வைக்கப்பட்டது.

இறுதியாக மஸ்ஜித் செயலாளர் ஏ.ஏ.சி நவாஸ் நன்றி உரையாற்றினார்கள். வெற்றிப்பெற்ற மாணவர்கள், வெற்றிக்கு முனைந்த மாணவர்கள் அனைவரையும் குழுவாக படம் எடுக்கப்பட்டது.

azh5_copy

இந்நிகழ்ச்சியை காண காயல்ப்ட்டினம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நேரில் வந்து இளம் ஹாஃபிழ் களின் குர்ஆண் ஓதும் அரிய நிகழ்ச்சியில் கலந்து பயனடைந்து சென்றனர்.

இருதினங்களும் நிகழ்ச்சயில் கலந்துக்கொண்ட அணைத்து போட்டியாளர்களுக்கும் விருந்துபசாரம், இருப்பிட வசதி, போக்குவரத்து செலவு ஆகியவைகள் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

azh4

இருதினங்களாக நடைபெற்ற நிகழ்ச்சியினை மஸ்ஜித் நிர்வாகம், செயற்குழுவினர், விழா குழு, ஒருங்கிணப்பாளர்கள் ஆகியோர் திறம்பட செய்திருந்தனர்.

கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அணைத்து வீடியோக்களையும் பார்த்து பயன் அடையலாம்.

https://www.youtube.com/playlist?list=PL1lYwzXleaV4wSqzI5WAY4SCeZ1nopsch

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh