بسم الله الرحمن الرحيم
Friday 16th November 2018 | 07 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right
IOB வங்கி காயல்பட்டினம் கிளையில் உள்ள பிரச்சனைகள் குறித்து சென்னை தலைமை நிலையம் மற்றும் தூத்துக்குடி மண்டல மேலாளர் ஆகியோருக்கு நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு! அச்சிடுகமின்-அஞ்சல்
30 நவம்பர் 2016 மாலை 09:25

கடந்த நவம்பர் 8 அன்று - ரூபாய் 500 மற்றும் 1000 ஆகியவை செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் - வங்கிகளில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

காயல்பட்டினத்தில் உள்ள - சென்ட்ரல் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் தங்கள் பணத்தை எடுக்க, அவ்வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், இப்பிரச்சனை கடுமையாக உள்ளது.

iob

அளவுக்கதிகமாக திரளும் கூட்டத்தினை சமாளிக்க, கடந்த வாரம் - நடப்பது என்ன? சமூக ஊடக குழும அங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தன்னார்வலர்கள் ஆகியோர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் டோக்கன் முறையை நடைமுறைப்படுத்தினர். இருப்பினும், வங்கி மேலாளரின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், அப்பணியை தொடர்ந்து செய்யமுடியவில்லை என - அப்பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள், நேற்று அறிவித்தனர்.

இந்தியன் ஒவ்ரசீஸ் வங்கி காயல்பட்டினம் கிளையில் உள்ள பிரச்சனைகள் குறித்து - சென்னை அண்ணா சாலையில் உள்ள அவ்வங்கியின் தலைமை நிலையத்தில், அவ்வங்கியின் துணை பொது மேலாளரிடம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, நவம்பர் 23 அன்று கோரிக்கை கொடுக்கப்பட்டது.

iob_rm_tuty

தொடர்ந்து, நேற்று (நவம்பர் 29), தூத்துக்குடியில் உள்ள அவ்வங்கியின் மண்டல மேலாளர் திரு ஸ்ரீனிவாசனை - நடப்பது என்ன? குழும அங்கத்தினர் சந்தித்து - காயல்பட்டினம் கிளையின் நிலையை விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் - வங்கிக்கு அனுப்பப்படும் பண அளவை பல மடங்கு உயர்த்த கோரியும், தினசரி வழங்கப்படும் டோக்கன் எண்ணிக்கையையும் பல மடங்கு உயர்த்த கோரியும் கோரிக்கை வைத்தனர்.

தங்கள் வங்கிக்கு குறைவாகவே பணம் வருவதாகவும், சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை - தன் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், மண்டல மேலாளர் தெரிவித்தார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com