بسم الله الرحمن الرحيم
Friday 21st September 2018 | 10 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right
நாடா புயல் எச்சரிக்கை! பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து வருவாய் துறையின் சில அறிவுரைகள்!அச்சிடுகமின்-அஞ்சல்
30 நவம்பர் 2016 மாலை 09:53

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை 8.30 மணியளவில் புயலாக உருவாகி டிசம்பர் 2ம் தேதி கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நாடா புயல் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பாதை வானிலை ஆய்வு மைய இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

அதன்படி, சென்னைக்கு 830 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த இந்த புயல் சின்னமானது புதுச்சேரிக்கும் - வேதாரண்யத்துக்கும் இடையே கடலூரில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயலின் தாக்கம் சென்னைக்கு இருக்காது என்றாலும், சென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது.

nada-cyclone34-30-1480499440


இதனால்,  நாளை காலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இது படிப்படியாக அதிகரித்து உள்மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாடா புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து வருவாய் துறையின் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

1. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.

2. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.

3. புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.

4. கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.

5. தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.

6. நீர்நிலைகள் மற்றும் ஆற்றின் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.

7. சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.

8. நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும்.

9. குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும்.

10. மழைநீரில் செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினை வைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

11. மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.

12. அமைதியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாக எதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும் பயன்படலாம்.

13. அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.

14. மின்கம்பங்களிலிருந்து தளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாக தவிர்க்கவும்.

15. பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில் மட்டுமே செல்லவும்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com