கோயம்புத்தூரில் நடைபெற்ற அகடமி அளவிலான கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் 10 வயதுக்குற்பட்ட அணியினர் கோப்பையை வென்றனர்!அச்சிடுக
30 நவம்பர் 2016 மாலை 11:05

கோயம்புத்தூரில் நடைபெற்ற அகடமி அளவிலான கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் 10 வயதுக்குற்பட்ட அணியினர் கோப்பையை வென்றனர்!

கோயம்புத்தூர், குனியமுத்தூர் அருகே, இடையர்பாளையம் சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா பள்ளியில், இடையர்பாளையம் தனம் கால்பந்து அகடமி சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி இம்மாதம் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திருச்செங்கோடு மற்றும் காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து 40 அணிகள் பங்கேற்றன. முதல் சுற்றுகள் லீக் முறையிலும், அதில் அதிக புள்ளிகள் பெற்ற அணிகள் காலிறுதிப் போட்டிக்கும் தகுதிபெற்றன.

10 வயதுக்குற்பட்ட பிரிவின் அரையிறுதிப் போட்டியில் தனம் கால்பந்து அகடமி அணியினர் ஈரோடு ஃபியூஸர் ஒலிம்பியாஸ் அணியை 4 -3 என்ற கோல் கணக்கிலும், காயல்பட்டினம் வீ-யூனைடெட் அகடமி அணியினர் கோவை ஃபஸ்ட் கிக் அணியினரை 2 - 1 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.

இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் அகடமி அணியினர் 2 - 0 என்ற கோல் கணக்கில் கோவை தனம் கால்பந்து அகடமி அணியினரை வென்று ”தனம் கோப்பையை” வென்றனர்.

v_cup_cbe

12 வயதுக்குற்பட்ட பிரிவின் அரையிறுதிப் போட்டியில் கோவைபுதூர் சுகி கால்பந்து அகடமி அணியினர் ராயல் கால்பந்து அணியை 3 - 0 என்ற கோல் கணக்கிலும், காயல்பட்டினம் வீ-யூனைடெட் அகடமி அணியினர் கோவை தனம் கால்பந்து அகடமி அணியை 2 - 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இறுதிப் போட்டியில் கோவைபுதூர் சுகி கால்பந்து அகடமி அணியினர் 3 - 1 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் கால்பந்து அகடமி அணியை வென்று ”தனம் கோப்பையை” தட்டிச் சென்றனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் திரு. வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.

V2Runner

இப்போட்டித் தொடரின் சிறந்த வீரர்களாக 10 வயதுக்குற்பட்ட பிரிவில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் கால்பந்து அகடமியின் செய்யது இப்றாஹீம் என்ற வீரரும், 12 வயதுக்குற்பட்ட பிரிவில் சிறந்த வீரராக வஸீம் என்ற வீரரும் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள்.

தகவல் மற்றும் படங்கள் 

எம்.ஜஹாங்கீர் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh