بسم الله الرحمن الرحيم
Tuesday 22nd May 2018 | 07 ரமலான் 1439AH
பதாகை
news menu left
news menu right
தமுமுக வின் தலைமை பொதுக்குழு கூட்டம்! தலைவராக பேரா.எம்.எச். ஜவாஹிருல்லாஹ் ஏகமனதாக தேர்வு!!அச்சிடுகமின்-அஞ்சல்
03 டிசம்பர் 2016 மாலை 03:16

 நவம்பர் 30, 2016 அன்று திண்டுக்கல்லில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொதுக்குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தமுமுக அமைப்பு நிர்ணயச் சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. பின்னர் நடைபெற்ற அமைப்புத் தேர்தலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பேரா.எம்.எச். ஜவாஹிருல்லாஹ் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்; மஸ்ஜித் இடிப்புக்  குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும்; பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும்; ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கருஞ்சட்டை அணிந்து தர்ணா போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

2. போபால் மத்தியச் சிறையிலிருந்து எட்டு முஸ்லிம் இளைஞர்களை பச்சைப் படுகொலை செய்துவிட்டு, மோதல் சாவு (என்கவுன்டர்) என்று நாடகமாடும் அயோக்கியத்தனத்தை பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

3. ஜாகிர் நாயக் மீது மத்திய மாநில மதவெறி அரசுகள் மேற்கொண்டு வரும் பழிவாங்கும் போக்கையும், அவரது நிறுவனத்தை 5 ஆண்டுகள் தடைசெய்துள்ள ஜனநாயகப் படுகொலையையும் வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக மருத்துவர் ஜாகிர் நாயக் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய, மராட்டிய மாநில பாஜக அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடையையும் நீக்கவேண்டும் என்றும் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

4. இந்தியாவின் பன்மைத்துவத்தையும், சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசு பொது சிவில் சட்டம்  கொண்டு வருவதற்காக எடுக்கும் முன்முயற்சிகளை  பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

5. மாவீரன் திப்பு சுல்தான் மீது அவதூறு செய்து வருவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தேச விடுதலைக்காக தியாகங்கள் பலசெய்த திப்பு சுல்தான், பகதூர்ஷா உள்ளிட்ட மன்னர்களின் வரலாற்றையும், கண்ணியமிகு காயிதே மில்லத், மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோரின் வரலாற்றையும் பாடநூற்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

6. சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் இந்தியாவை விட்டு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்கள் டிசம்பர் 31, 2021க்குள் வெளியேறிவிட வேண்டும் என்று பேசியுள்ள ராஜேஸ்வர் சிங் உட்பட வெறுப்புப் பரப்புரைகள் செய்வோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. காஷ்மீரின் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டுவரும் ஈவிரக்கமற்ற வன்முறை வெறியாட்டத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

8. மதுரையில் முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அலைக்கழிப்பதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

9. நீண்ட கால சிறைவாசிகளுக்கு மாநில அரசு தண்டனைக் குறைப்புச் செய்துகொள்ள உச்சநீதிமன்றம் அதிகாரம்  அளித்துள்ளது. இதனடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும், தமிழகச் சிறைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக வாடுகிற முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து வாழ்நாள் சிறைவாசிகளையும் மாநில அரசு விடுதலை செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

10. தமிழக அரசு உடனடியாக வக்ஃப் வாரிய புதிய நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

11. இந்துமுன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலையை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. அந்தப் படுகொலையைத் தொடர்ந்து முஸ்லிம்களின் நிறுவனங்களையும், சொத்துக்களையும் குறிவைத்து நடத்தப்பட்டக் கலவரத்தைத் தூண்டிவிட்டவர்கள் கைது செய்யப்படாதது  கவலை அளிக்கிறது.

12. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் அரபி, உருது ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

13. கல்லூரி ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வுகளில் (SLET) தொடர்ச்சியாக அரபி, உருதுமொழிப் பாடங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. SLET தேர்வுகள் அரபி, உருது மொழிகளுக்கும் சேர்த்து நடத்தப்பட வேண்டும் என்றும், சிறுபான்மை மொழிகளை வஞ்சிக்கும் முறை தொடரக் கூடாதென்றும் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பி.எஸ்.ஹமீது
பொதுச் செயலாளர் (பொறுப்பு)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

தகவல்: http://www.tmmk.in/

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com