بسم الله الرحمن الرحيم
Wednesday 22nd May 2019 | 17 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
குழந்தைகளின் தேர்ச்சியை அறிந்துக்கொள்ள துடிக்கும் அப்டேட் பெற்றோர்கள்! அமெரிக்க நிறுவனத்தின் சர்வே! அச்சிடுகமின்-அஞ்சல்
21 செப்டம்பர் 2011 காலை 08:56

தம் குழந்தைகளின் கல்வி மற்றும் இதர செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை இ-மெயில் வழியாக பெற்றுக் கொள்வதையே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

குறிப்பாக இ-மெயில் வழி தகவல் பரிமாற்றம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளத்தின் மூலமும் தொடர்பு கொள்வதை பெற்றோர்கள் விரும்பவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

National School Public Relations Association என்னும் அமெரிக்க நிறுவனம், பெற்றோர்கள் பள்ளிகளில் இருந்து எவ்வகையில் தகவல்களைப் பெற விரும்புகின்றனர் என்பது குறித்து ஆய்வு நடத்தியது. தனது 50 உறுப்பு மாவட்டங்களில் 43 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் இதுதொடர்பான தரவுகளைத் திரட்டியது. ஆய்வு முடிவில், இணைய வழி தகவல் தொடர்பை பெற்றோர்கள் அதிகம் விரும்புவது தெரியவந்தது.

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சர்வே என்ற போதும், இந்தியச் சூழலுக்கும் இந்த ஆய்வுப் பொருளும், முடிவும் பெருமளவு ஒத்துப்போகின்றன. இந்த ஆய்வு பள்ளி நிர்வாகங்களுக்கு இந்த ஆய்வு முடிவுகள் பல்வேறு வகைகளில் உறுதுணையாக இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் பெற்றோர்களைத் தொடர்பு கொள்ளுதல், பள்ளி நிகழ்ச்சிகளைப் பெற்றோருக்குத் தெரிவித்தல், குழந்தையின் கல்வி, இதர திறன்கள், செயல்பாடுகள் குறித்த விவரங்களை பெற்றோர்கள் எப்படிப் பெற விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொள்வதன் மூலம், அதே வழியில் பெற்றோர்களுடனான தொடர்புக் கலையை மேம்படுத்திக் கொள்ள இவ்வாய்வு முடிவுகள் அடிப்படையாக அமைகின்றன.

Email

ஆய்வு முடிவில், பள்ளிகளில் இருந்து தகவல்களைப் பெறும் வழிகளில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த வழிகள்

1. இமெயில்

2. பெற்றோருக்கான பிரத்யேக இணையபக்கம்

3. இ-நியூஸ் லெட்டர்கள்

4. பள்ளியின் இணையதளம்

5. தொலைபேசி

தேவைப்படும் சமயத்தில் தகவலைப் பெற முடியும்/ சரிபார்த்துக் கொள்ள முடியும் என்பதால் இணையதளம் பெரும் விருப்பத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது.

ஆச்சரியத்துக்கு உரிய ஒன்றாக, இணைய உலகின் தற்போதைய பிரசித்திகளான டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களை பெற்றோர்கள் விரும்பவேயில்லை. இப்பட்டியலில் பத்திரிகைகள், நேரடி கூட்டம் போன்ற அரதப்பழசான நடைமுறைகளையும் தாண்டி கடைசி இடத்தையே பிடித்துள்ளன.

தெரிந்து கொள்ள விரும்பும் தகவல்கள்

*குழந்தையின் செயல்பாடு, எப்படி மேம்படுத்திக் கொள்கின்றனர்

*அவர்களின் செயல்திறனில் ஏற்படும் தளர்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுதல்

* என்ன கற்றுக் கொள்ள குழந்தைகள் விரும்புகின்றன

*வீட்டுப்பாடங்கள், ரேங்க்

என்ற வரிசைப்படி தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவே பெற்றோர்கள் விரும்புகின்றனர். இடைநிலைப்பள்ளி செல்லும் மாணவன் குறித்த தகவல்களும் இந்த வரிசைப்படியேதான் இருக்கின்றன. ஆனால், துவக்கப்பள்ளியில் குழந்தை மற்றவர்களுடன் எப்படிப் பழகுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும்; அதுவே இடைநிலைப்பள்ளி மாணவன், ஆசிரியரிடம் எப்படிக் கலந்துரையாடுகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளவும் விரும்புவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

50 சதவீத பெற்றோர், முடிவுகள் எடுக்கப்பட்ட உடனே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். 36 சதவீதத்தினர் மாதம் ஒரு முறை அப்டேட் செய்யப்பட வேண்டும் என்றும், 13 சதவீதத்தினர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்ற ரீதியிலும் தகவல்களைப் பெற விரும்புகின்றனர்.

மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை மட்டும் பள்ளிகள் கவனத்தில் கொண்டால் போதாது. பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும், அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் உணர்ந்து பள்ளிகள் செயல்பட்டால் மட்டுமே பெற்றோர்-பள்ளிக்கு இடையேயான உறவு மேம்படும். கல்வியின் தரமும் மேம்படும்.

கல்வி வழிகாட்டி

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com