அமீரக காயல் நல மன்ற மாதந்திர செயற்குழு கூ ட்ட நிகழ்வுகள்!அச்சிடுக
19 அக்டோபர் 2011 மாலை 03:57

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அமீரக காயல் நல மன்றத்தின் அக்டோபர் மாத மாதந்திர செயற்குழு கூட்டம் 14 /10 /2011 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் தலைவர் ஜனாப் JSA புஹாரி அவர்கள் இல்லத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு அல்ஹாஜ் விளக்கு ஷேக் தாவூத் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார்கள். ஜனாப் ஈசா ஹுசைன் அவர்கள் கிராஅத்துடன் கூட்டம் ஆராம்பமாகியது.

042

இந்த கூட்டம் குறிப்பாக எதிர்வரும் மன்றத்தின் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் பற்றி விவாதிக்க ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்ததால் ஊர் நலன்கள் பற்றிய நல்ல பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு, கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

055

047

1 காய‌ல்ப‌ட்டிண‌ம் கொடை வ‌ள்ள‌ல்க‌ள் லெப்ப‌ப்பா ச‌கோத‌ர்க‌ளின் பேர‌ரும், ந‌ம‌து மன்றத்தின் முன்னாள் பொதுச்செய‌லாள‌ர் காய‌ல் ஷேக் காக்கா அவ‌ர்க‌ள‌து அன்புத் த‌ந்தையும், நமது மன்ற உறுப்பினர் ஹ‌மீது அவ‌ர்க‌ளின் பாட்ட‌னாரும் ச‌மூக‌ ஊழிய‌ருமான‌ சி.லெ.ஷாஹுல் ஹ‌மீது ஹாஜியார், மற்றும் மர்ஹூம் இப்ராஹிம் சார் அவர்களின் மகன் வழி பேரனும், நமது மன்ற உறுப்பினர் ஜனாப் குளம் முஹம்மத் தம்பி அவர்களின் இளைய புதல்வர் ஹாமித் ஆகியோரின் வபாஃத் செய்தி அறிந்து இம்மன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னவர்களின் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் 'சபூர்' எனும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.

054

2 மன்றத்தின் பொதுக்குழு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று துபாய் அல் சத்வா வின் அமைந்துள்ள அல் சபா பார்க்கில் வைத்து நடை பெரும் என்று தீர்மானிக்கப்பட்டது.

052

3 இந்த மாபெரும் கூட்டத்திற்கு சுமார் 350 பேர்கள் (ஆண்கள் / பெண்கள்) வரலாம் என்று எதிர்பார்க்க படுவதாகவும், இதற்க்கான எல்லாவித ஏற்பாடுகளை கையாள்வதற்கு ஜனாப் துணி உமர் ஹாஜியார் தலைமையில் பல குழுக்கள் அமைக்கபெற்று செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அனைவரின் பிரார்த்தனையுடன்  கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

தகவல்

சாளை ஷேக் ஸலீம்

துணை தலைவர்

அமீரக காயல் நல மன்றம்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh