بسم الله الرحمن الرحيم
Friday 26th April 2019 | 20 ஷஃபான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நகராட்சி மன்ற தலைவர் தேர்தல் சகோதரி ஆபிதா ஷேக் தேர்வு துபாய் வாழ் காயல் நண்பர்கள் கொண்டாட்டம்!அச்சிடுகமின்-அஞ்சல்
22 அக்டோபர் 2011 காலை 07:14

நடைபெற்று முடிந்த தேர்தலில் நமது நகராட்சி மன்றத்தின் தலைவராக சகோதரி ஆபிதா ஷேக் அவர்கள் ஏகோபித்த காயலர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டதை கொண்டாடுமுகமாக MEGA வின் ஒருங்கிணைப்பாளரும், அமீரக காயல் நல மன்றத்தின் துணை தலைவருமான ஜனாப் சாளை ஷேக் ஸலீம் அவர்கள் இன்று இரவு துபாய் முதீனா வில் அமைந்திருக்கும் " மகாராஜா ரெஸ்டாரன்ட் " தில் இரவு விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் இருபதிற்கும் மேற்பட்ட காயலரகள் கலந்துகொண்டு தங்கள் மகிழ்சிகளைப பரிமாறிக்கொண்டார்கள்.

SAM_0019

SAM_0021

SAM_0028

ஜனாப் ஸலீம் அவர்கள், அவர்கள் சார்பிலும் வந்திருந்தோர் சார்பிலும் சகோதரி ஆபிதா அவர்கள் நமது நகர் மன்ற தலைமை பொறுப்புக்கு பணிக்கப்பட்டதர்க்காக சகோதரி அவர்களுக்கு முதற்க்கண் வாழ்த்து தெரிவித்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18 வார்டு கவுன்சிலர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இதில் கலந்து கொண்ட எல்லோருமே சகோதரி ஆபிதா அவர்கள் தலைமையில் இயங்க இருக்கும் நகராட்சி மன்றத்தின் நிர்வாகத்திற்கு அனைத்து கவுன்சிலர்களும் தங்களின் மேலான ஆதவு மற்றும் ஒத்துழைப்புகளையும் வழங்குவதோடு நகராட்சியில் நல்லாட்சி நிலைத்திட எல்லோரும் ஓரணியில் நிற்க வேண்டும என்ற ஒருமித்த கருத்துக்களை பதிவு செய்தனர்.

SAM_0033

SAM_0050

இந்த ஓன்று கூடல் எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றதோடு, கூடி இருந்த ஊர் நலனில் அக்கறை கொண்டவர்கள், தற்போது நமது ஊரில் நிலவி வரும் சூழ்நிலைகள், எதிர்காலத்தில் நாம் நம் ஒற்றுமையை நிலைநாட்ட எடுக்க வேண்டிய செயல் திட்டங்கள், தடுக்கப்பட வேண்டிய தவறுகள் உட்பட ஊரின் ஒற்றுமைக்கு இளைய தலைமுறையினர் ஆற்ற வேண்டிய கடைமைகள் மற்றும் பெரியோர்களிடம் இருந்திருக்க வேண்டிய பரந்த மனப்பான்மை போன்ற நல்ல பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன. MEGA போன்று ஒரு நல்ல அமைப்பை மீண்டும் துவக்கி ஊரில் இயங்கி வரும் ஐக்கிய பேரவையை புதிய பரிணாம வளர்ச்சிபாதையில் கொண்டு செல்ல வேண்டும என்றும் விவாதிக்கப்பட்டது.

SAM_0055

SAM_0058

நாவிற்கினிய உணவு வகைகள் பரிமாறப்பட்டு இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாய் நிறைவுக்கு வந்தது.

தகவல் / புகைப்படங்கள்

ஆசாத்

அமீரகம்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com