بسم الله الرحمن الرحيم
Wednesday 22nd May 2019 | 17 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஃபலஸ்தீன முன்னாள் தலைவர் அரஃபாத்தின் உடல் நாளை தோண்டி எடுத்து சோதனை!அச்சிடுகமின்-அஞ்சல்
26 நவம்பர் 2012 மாலை 04:02

arafat

ஃபலஸ்தீன முன்னாள் தலைவர் யாசிர் அரபாத்தின் உடல் நாளை (செவ்வாய்க் கிழமை) தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பலஸ்தீன நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு பாரிஸில் மரணமடைந்த யாசிர் அரபாத்தின் உடல் மீது நிபுணர்களால் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அரபாத்திற்கு நஞ்சூட்டப்பட்டதாக எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்தே அவரது உடல் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

அரபாத்தின் மருத்துவ அறிக்கையில் அவர் இரத்த கோளாரால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அரபாத்தின் உடைமைகளில் பொலொனியம் - 210 எனும் ஆட்கொல்லி கதிரியக்கம் இருப்பதை சுவிட்சர்லாந்து நிபுணர்கள் அண்மையில் கண்டு பிடித்தனர்.

இது தொடர்பில் கடந்த ஆகஸ்ட் தொடக்கம் பிரான்ஸ¤ம் மரண விசாரணையை ஆரம்பித்துள்ளது. இதனையொட்டி அரபாத்தின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் மேற்குக் கரையின் ரமல்லா அடக்கஸ்தலம் இம்மாத ஆரம்பத்திலேயே மூடப்பட்டது.

இந்நிலையில் அரபாத்தின் உடல் வைக்கப்பட்டிருக்கும் அடக்கஸ்தலத்தின் மேற்பரப்பிலிருக்கும் கல் இன்று அகற்றப்பட்டு அவரது உடல் மேலே எடுக்கப்படவுள்ளது. இதன்போது அரபாத்தின் மரணம் குறித்து தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளும் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யாவின் விஞ்ஞானிகள், அவரது உடலில் இருந்து மாதிரிகளை பெறவுள்ளதாக பலஸ்தீன உளவுப் பிரிவு தலைவர் தெளபிக் திராவி தெரிவித்துள்ளார்.

மேற்படி நிபுணர்கள் பெறப்பட்ட மாதிரிகளை கொண்டு அவர்களது நாடுகளுக்கு சென்று பொலொனியம் கதிரியக்கம் அல்லது வேறு ஏதாவது நச்சுப் பொருள் இருப்பது குறித்து ஆய்வு நடத்தவுள்ளனர். யாசிர் அரஃபாத்தின் உடல் அன்றைய தினமே (நாளை) இராணுவ மரியாதையுடன் மீண்டும் அடக்கப்படவுள்ளது

அத்தேஷ்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com