بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஹஜ் யாத்திரை நெரிசலில் மரணமானோர் எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு: காயமடைந்தோர் 863.அச்சிடுகமின்-அஞ்சல்
25 செப்டம்பர் 2015 காலை 10:31

சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்தி ரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல இந்தியர்கள் உட்பட 805-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப் பணி வேகமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1.5 லட்சம் முஸ்லிம்கள் உட்பட உலகம் முழுவதும் இருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர்.

mina_2560478g

சவுதியில் உள்ள புனித மெக்காவில் கடந்த 12-ம் தேதி லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய மசூதி அருகே ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. இதில் 11 இந்தியர்கள் உட்பட 115 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சோகம் நீங்குவதற்குள், மினா நகரில் நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பலியாயினர்.

மெக்காவில் இருந்து புனித பயணமாக முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் மினா நகருக்கு நேற்று வந்தனர். முக்கிய நிகழ்ச்சி யான சாத்தான் மீது கல்லெறிதல் நேற்று நடந்தது. இதற்காக மினா நகரில் லட்சக்கணக்கான வர்கள் குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கீழே விழுந் தவர்கள் எழுந்திருக்க முடியாத அளவில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. இதில் நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

இதுவரை 717 பேர் உயிரிழந்தி ருப்பதாகவும், இதில் 3 பேர் இந்தியர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும் பல இந்தியர்கள் உட்பட 805 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முதல்கட்ட தகவலாக கூறுகையில், ''மினா நகரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 இந்தியர்கள் காயம் அடைந் துள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்'' என்றனர்.

இதற்கிடையில் 3 இந்தியர்கள் இந்த விபத்தில் பலியானதாக நேற்று மாலை தகவல் வெளி யானது. ஆனால், அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப் பணி வேகமாக நடந்து வருகிறது. மருத்துவ குழுவினரும் துரிதமாக பணியாற்றி வருகின்றனர். நெரிசல் ஏற்பட்டதும் மாற்று வழிகள் மூலம் யாத்ரீகர்களை சிறப்பு குழுவினர் வெளியில் அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் 4000-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்'' என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த வர்கள் கூறுகையில், ''சாத்தான் மீது கல்லெறியும் தூண்கள் உள்ள இடத்தில் நெரிசல் ஏற்படவில்லை. 204-வது சாலை அருகே உள்ள ஜமாரத் பாலம் அருகில்தான் நெரிசல் ஏற்பட்டது'' என்றனர். ஹஜ் புனித யாத்திரை நிறைவு பெறும் நிலையில் நெரிசலில் சிக்கி 717 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் பலியானோரின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது.

ஹஜ் யாத்திரை சென்றவர் களின் உறவினர்கள் கூடுதல் தகவல் களை பெற 00966125458000, 009661 25496000 ஆகிய அவசர உதவி எண் களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி, சோனியா இரங்கல்

ஹஜ் புனித யாத்திரை சென்ற வர்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் மோடி கூறியுள்ளது: மெக்காவில் இருந்து பெரும் வேதனை அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கிறேன். காயமடைந்தோர் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.

மெக்காவில் நடைபெற்ற துயரம் பெரும் வருத்தமளிக்கிறது. அவர்களுக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அங்கு யாத்திரை சென்றுள்ள இந்தியர்கள் பத்திரமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப் பாக கவனித்து வருகிறது. மெக்கா வில் உள்ள இந்திய யாத்ரீகர்களுக்கு தேவையான அனைத்து உதவி களும் செய்யப்படும் என மத்திய வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரையில் நடந்த சோகங்கள்

ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பயணத்துக்காக மெக்கா, மதீனா நகர்களில் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் குவிகின்றனர். ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும் விபத்துகளும் நடந்து வருவதால், யாத்ரீகர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி தருவது மற்றும் பாதுகாப்பு வழங்குவதில் சவுதி அரசுக்கு பல்வேறு சவால்கள் ஏற்படுகின்றன.

1990: ஹஜ் யாத்திரையில் மிக மோசமான விபத்து நடந்த ஆண்டாக அமைந்தது. மெக்கா செல்லும் வழியில் உள்ள சுரங்க பாதை யில் நெரிசல் ஏற்பட்டு, 1426 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1994: மினா நகரில் சாத்தான் மீது கல்லெறிதல் நிகழ்ச்சியின்போது நெரிசலில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.

1997: மினாவில் தங்கியிருந்தவர்களின் கூடாரங்களில் தீப்பற்றியது. இதில் சிக்கி 340 யாத்ரீகர்கள் உடல் கருகி இறந்தனர். பலத்த காற்று வீசியதால் உயிரிழப்பு அதிகரித்ததாக கூறப்பட்டது. விபத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

1998: மினாவில் கல்லெறிதல் நிகழ்ச்சியில் திடீரென வதந்தி ஏற்பட்டதால் நெரிசலில் சிக்கி 180 பேர் உயிரிழந்தனர்.

2001: மினாவில் ஹஜ் யாத்திரையின் கடைசி நாளில் நெரிசல் ஏற்பட்டு 35 யாத்ரீகர்கள் இறந்தனர்.

2004: மினாவில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 244 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

2006: ஹஜ் யாத்திரை தொடங்குவதற்கு ஒருநாள் முன்பாக, மெக்கா பெரிய மசூதி அருகேயுள்ள 8 மாடி விடுதி இடிந்து விழுந்தது. இதில் தங்கியிருந்த 73 ஹஜ் பயணிகள் இறந்தனர். இதே ஆண்டு மினா நகரில் சாத்தான் மீது கல்லெறிதல் சடங்கில் நெரிசல் ஏற்பட்டு 51 இந்தியர்கள் உட்பட 364 பேர் இறந்தனர்.

2015: செப்டம்பர் 12-ம் தேதி மெக்கா பெரிய மசூதி அருகே கிரேன் சரிந்து 107 யாத்ரீகர்கள் மரணம் அடைந்தனர். அதன் பிறகு இரு வாரங்கள்கூட ஆகாத நிலையில் நேற்று மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பலியாகியுள்ளனர்.

தி இந்து

September 24, 2015

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com