بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அமெரிக்க எல்லைகளை முஸ்லிம்களுக்கு மூடிவிட வேண்டுமெனத் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப்பை புறக்கணிக்க வெள்ளை மாளிகை அறிவுரை!அச்சிடுகமின்-அஞ்சல்
11 டிசம்பர் 2015 மாலை 09:02

download_copy_copy

அமெரிக்கக் குடியரசை வழிநடாத்தும் தகுதி ஜனாதிபதி வேட்பாளார் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பாரிஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து அமெரிக்காவில் முஸ்லிம்களை எதிரத்து கருத்துக்களை காரசாரமாக வெளியிட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்தே வெள்ளை மாளிகையின் மேற்குறித்த அறிவிப்பு வெளியானதாக துருக்கியின் அனடொலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் உத்தியோபூர்வ பேச்சாளர் ஜொஷ் எர்னஸ்ட் இது குறித்துக் கூறுகையில் "அமெரிக்க எல்லைகளை முஸ்லிம்களுக்கு மூடிவிட வேண்டுமெனத் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப்புடைய கருத்துக்களுக்கு அமெரிக்காவை ஆளும் தகுதி கிடையாது. இதுவே அவரது ஆட்சிக் கனவின் முதல் தோல்வி. அவரது கருத்துக்கள் எமது தேசத்தைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக அது தேசத்தின் நலனுக்குத் தீங்கிழைக்கக் கூடியவை. எமது யாப்புக்கும் எமது பெறுமானங்களுக்கும் எதிரானவை அவை." என்றார்.

பல்வேறு முஸ்லிம் அமைப்புக்களும் இவரது கருத்துக்கள் தொடர்பில் தம் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளனர். முஸ்லிம் ஜனநாயக அமைப்பின் உறுப்பினர் கார்ஸொன் "ட்ரம்ப் இந்நாட்டின் ஆட்சிக்குப் பொருத்தமற்றவர் என்பதைத் திரும்பத் திரும்ப நிரூபிக்கிறார்." என்றார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் பிரதிநிதிகள் சபை அங்கத்தவருமான கீத் எலிஸன் "ட்ரம்ப் அமெரிக்கர்கள் மத்தியில் பிரிவினையை விதைக்கப் பார்க்கின்றார். ட்ரம்ப் எமது யாப்பிலே உள்ள மதச் சுதந்திரம், சகிப்புத் தன்மை தொடர்பான வாசங்களை வாசித்துப் பார்க்க வேண்டும்." என்றார்.

மீள்பார்வை

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com