بسم الله الرحمن الرحيم
Saturday 22nd September 2018 | 11 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சவூதி அரேபியாவில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், 20 பெண்கள் வெற்றி பெற்று சாதனை!அச்சிடுகமின்-அஞ்சல்
14 டிசம்பர் 2015 மாலை 11:12

சவூதி அரேபியாவில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், 20 பெண்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்தலில் வாக்களிப்பதற்கு, சவுதி அரேபிய பெண்களுக்கு இதுவரை அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பெண்கள் வாக்களிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அங்கு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் பெண்கள் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 6,440 வேட்பாளர்களில், 900 இடங்களில் பெண்கள் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில், புனித மக்கா நகரில் உள்ள மட்ரக்கா நகராட்சி உறுப்பினராக சல்மா பிண்ட் ஹிசப் அல்-ஒடைபி எனும் பெண் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 7 ஆண் மற்றும் 2 பெண் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். அத்துடன் ஜித்தாஹ் உள்ளிட்ட ஏனைய இடங்களிலும் மேலும் 18 பெண்கள் வெற்றி கண்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்போது ஆண் வாக்காளர்களை நேரில் சந்திக்கக்கூடாது என சவுதி தேர்தல் விதிகளில் கூறப்பட்டுள்ளது. பெண் வேட்பாளர்கள் பலரும், சமூக ஊடகங்களை பயன்படுத்தி பிரசாரம் மேற்கொண்டனர்.

 

அதிகார வர்க்கத்தினரின் மிரட்டல், வாகன சிரமம் என பல தடைகளை சந்தித்ததாக வாக்களிக்கச் சென்ற பெண்கள் பலரும் கூறியுள்ளனர். எனவே, பெண் வாக்காளர்கள் குறைந்த அளவில் அங்கு வாக்களித்துள்ளனர். தேர்தல் ஆணைய விவரப்படி, 1 லட்சத்து 19 ஆயிரம் பெண் வாக்காளர்கள் சவுதியில் உள்ளனர். சவுதியில், உள்கட்டமைப்பு வசதிகள் நவீன மயமாக காணப்பட்டாலும், பெண்களுக்கு முக்கியத்துவம் என்பது, இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்று பரவலாக கூறப்படுகிறது.

மீள்பார்வை

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com