بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
'நிமிர்ந்து நில் - மண்டியிடாதே! வளைகுடாவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் SDPI கட்சியின் மாநிலத் தலைவர் சிறப்புரை!!அச்சிடுகமின்-அஞ்சல்
20 ஜனவரி 2016 மாலை 09:25

சவூதி அரேபியா - கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்த SDPI கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி தெஹலான் பாகவி அவர்களுக்கு இந்தியன் சோஷியல் ஃபோரம் - தமிழ் கமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக SDPI கட்சி இந்தியா முழுக்க நடத்திவரும் 'நிமிர்ந்து நில் - மண்டியிடாதே' என்ற பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக தம்மாம் பகுதியிலும் கருத்தரங்கம் நடைபெற்றது.

14-ஜனவரி, 2016 அன்று இரவு 8:30 மணிக்கு அல் கோபர் - ரஃபா மெடிக்கல் சென்டர் ஆடிட்டோரியத்தில் வைத்து ஆரம்பமானது.

இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாணம் தலைவர் காயல் அபூபக்கர் அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்த நிகழ்ச்சியை இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாணப் பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

தம்மாம் கிளைத் தலைவர் நல்லூர் சைபுல்லாஹ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து கிழக்கு மாகாணத் துணைத் தலைவர் மௌலவி இக்பால் மன்பஈ அவர்கள் நிகழ்ச்சி அறிமுக உரை ஆற்றினார்கள். இந்திய தேசிய அளவில் கட்சியின் அவசியத்தையும் அது முன்னெடுத்துச் செல்லும் நேர்மறை அரசியலையும், சமகால அளவில் அனைத்து சமூகத்தினருக்குமான பொதுவான பிரச்சனைகளை அணுகும் முறைகளையும் அழகாக எடுத்துரைத்தார்.

dmm_sdpi

மாநிலத் தலைவர் மௌலவி தெஹலான் பாகவி அவர்களை கண்ணியப்படுத்தும் முகமாக தம்மாம், கோபர், சிஹாத், ஜூபைல், அல்ஹஸா கிளைகளின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் சோசியல் ஃபோரம் கிழக்கு மாகாணம் தேசிய தலைவர் சகோ. வசீம் அவர்களும், இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் கிழக்கு மாகாணம் தமிழ் பிரிவின் தலைவர் சகோ. சாதிக் மீரான் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் மௌலவி தெஹ்லான் பாகவி அவர்கள் 'நிமிர்ந்து நில், மண்டியிடாதே!' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்திய தேசத்தின் விரோதிகளாக, தேச விரோத சக்திகளாக செயல்படும் பாசிச சங்பரிவார சக்திகளின் சதித்திட்டங்களையும், அது சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாநிலங்களுக்கான தலைவர் சகோ. வசீம் அவர்கள் தலைவருக்கு நினைவுப் பரிசினை வழங்கி கவுரவித்தார்கள்.

SDPI கட்சியின் அதிகாரப்பூர்வ மாதமிருமுறை பத்திரிக்கையான 'புதிய பாதை' சந்தா சேர்ப்பு இயக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற சந்தாக்களின் முதல் பகுதியை கிளை நிர்வாகிகள் தலைவரிடம் ஒப்படைத்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக அல்கோபர் கிளைத் தலைவர் அதிரை அபுபக்கர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். வருகை புரிந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கியதோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

தகவல்: அபூபக்கர்

தம்மாம்

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com