மியான்மரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையைக் கண்டித்து ஹாங்காங்கில் கண்டன போராட்டம்! காயலர்களும் பங்கேற்பு!! வீடியோ காட்சிகளுடன்!!! | ![]() | ![]() |
10 செப்டம்பர் 2017 மாலை 07:29 | |||
மியான்மரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையைக் கட்டுப்படுத்த ஐ.நா. தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹாங்காங் வாழ் சர்வதேச முஸ்லீம் சமூகத்தினர் இன்று செப்டம்பர் 10 ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தினர். இன்று நடைபெற்ற போராட்டத்தில் இந்தியா , தமிழகம் காயல்பட்டினம் உட்பட உலகெங்கிலும் இருந்து ஹாங்காங்கில் வசிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூக சிந்தனையாளர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இன்று மதியம் இரண்டு மணியளவில் ஹாங்காங் டமர் பூங்காவில் துவங்கிய பேரணி வான் சாயில் அமைந்துள்ள பர்மா தூதரகதிற்கு மாலை நான்கு மணியளவில் வந்தடைந்தது. வீடியோ காட்சிகள் பர்மா என்று முன்பு அறியப்பட்ட மியான்மர் சற்றேறக்குறைய 5.1 கோடி மக்களைக் கொண்டுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு வகிக்கும் பர்மா இனக்குழுதான் இராணுவத்தையும் அரசாங்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் அவர்களைத் தவிர 135 -க்கும் அதிகமான இனக்குழுக்கள் ஒவ்வொன்றும் தங்களது சொந்த கலாச்சாரத்துடன் அந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. மியான்மர் அரசின் நடவடிக்கைகளால் நிலங்களை இழந்துள்ள அவர்களில் பலர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இது ஒரு நீண்ட கால முரண்பாட்டைத் தோற்றுவிக்கும். மியான்மரை ஆளும் பெரும்பான்மை பர்மிய இனத்திற்கும் மியான்மரின் சிறும்பான்மை இனங்களுக்கும் இடையிலான மோதல்களானது உலகின் தொடர்ந்து நடந்து வரும் நீண்டகால மோதல்களுள் ஒன்றாகும். அவர்களில் ஒரு இனம் தான் ரோஹிங்கியா முசுலீம்கள். அவர்கள் மியான்மரின் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதனாலே அவர்கள் எல்லாவற்றிலும் மிக மோசமான பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுகின்றனர். எண்ணிக்கையில் தோராயமாக பத்து அல்லது இருபது இலட்சத்திற்குள் இருக்கும் ரோஹிங்கியா இனத்தவர் நாட்டின் வடக்கில் ரக்கினே மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ரோஹிங்கிய மக்களுடைய பிரச்சினைகளின் மையமானது மியான்மரின் குடியுரிமை சட்டங்களில் இருக்கிறது. அது முழுமையான தேசியத்தை அவர்களுக்கு மறுப்பதன் மூலம் அவர்களின் உரிமைகளையும் சேர்த்தே மறுக்கிறது. இது அவர்களுக்கெதிரான பரந்துபட்ட அதிகாரப்பூர்வ மற்றும் வெளிப்படையான பாரபட்சத்தைப் பிரதிபலிக்கிறது. படங்கள் முகநூலூடாக... அல் ஹாஃபிழ் வி.எம்.டி ஹஸன் மற்றும் நஃபாயிஜ்
Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |